விடுமுறை விடுங்கள்
*
மழை நாட்களில்
குடைக்கு விடுமுறை விடுங்கள்
பனியில் கம்பளிக்கு
விடுமுறை விடுங்கள்
உடலை இயற்கையோடு
உறவாட விடுங்கள்
*
மலரை பறிக்காமல்
கூந்தலுக்கு விடுமுறை
விடுங்கள்
மலரும் செடியும் காதல்
கொள்ளட்டும் காதலுக்கு
கூந்தலும் காற்றும் கம்பிகர்வி
வாசிக்கட்டும்
*
குருவி கூண்டுகளுக்கு
விடுமுறை விடுங்கள்
வானத்தின் நீள அகலத்தை
பறவைகள் அளந்துவந்து
நம்மிடம் சொல்லட்டும்
*
வண்ணத்துப் பூச்சிகளை
கையில் பிடிக்காமல்
அதன் கைபிடித்து நடந்து
அதன் சிறகுக்கு
விடுமுறை விடுங்கள்
*
தங்கங்களை வெட்டி எடுப்பவருக்கு
விடுமுறை விடுங்கள்
பூமி தாய்
ஆபரணங்கள் செய்து போட்டு
அழகு பார்த்து கொள்ளட்டும்
*
பெட்ரோலியத்தை உறிஞ்சும் பணிக்கு
விடுமுறை விடுங்கள்
அதில் பூமி சுத்தட்டும்
*
பாவங்களுக்கு
விடுமுறை விடுங்கள்
கடவுள் ஓய்வுயெடுத்துகொள்ளட்டும்
*
கனவுக்கு விடுமுறை கொடுங்கள்
இரவின் நீளம் குறைந்து
பகலின் நீளம் அதிகரிக்கட்டும்
*
மரங்களுக்கு
விடுமுறை விட்டு விட்டு
நீங்கள் மரங்களுக்கு
விசிறி விடுங்கள்
*
ஒரு நாள் காதலியை
கொஞ்சுவதற்கு
விடுமுறை விட்டு விட்டு
காகக்கையை கொஞ்சுங்கள்
*
செயற்கைக்கு
விடுமுறை விட்டு விட்டு
இயற்கையில் பயணித்து
பாருங்கள்