ஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 07 - சந்தோஷ்

கோவை பெருநகர குற்றவியல் நீதிமன்ற வளாகம்..!


தினகரன், கோவை மாநகர காவல்துறை கண்காணிப்பாளரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த அந்த நொடியிலிருந்து சட்டத்துறைகள் பதட்டம் அடைந்தன. காவல்துறையின் சாதூர்ய மூளைகள் துரிதமாக செயல்பட்டன. தினகரனை நோக்கி அதிகார வர்க்கத்தின் துப்பாக்கி முனைகள் கொக்கரித்து எச்சரித்தன.

அரைமணி நேரத்திற்கு பிறகு கலெக்டர் , தாசில்தார் என எல்லா அரசாங்க அதிகார வர்க்கங்களும் தினாவின் மிரட்டலுக்கு பணிந்து அந்த நீதிமன்ற வளாகத்தில் வந்தனர்.

இடி இடிக்கும் என்றோ.. மழை கொட்டும் என்றோ எதிர்ப்பார்க்கவில்லை அந்த தருணம். காரணம் இது பலகோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் எனும் வித்தைக்காரர்களின் நாடகம் அல்ல. ஒரு கோபக்காரனின் வெறியில் இந்திய அரசாங்கத்தை கைப்பற்றிய ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும். கொடூர அதிகாரிகளுக்கும் விடப்பட்ட பகிரங்க மிரட்டல்.
-------------------------
திக்கி திக்கி பேசியே பழகப்பட்ட தினகரனுக்கு கோபம் வந்தால், அவனின் குரலில் தொடர் பேச்சில் கம்பீரம் பிறக்கும். அனல் தெறிக்கும். சீண்டும்வரை அவன் அப்பாவிதான். சீண்டிப்பார்த்தால் சீறும் சிறுத்தையாகிவிடும் வினோதன். ஆழ்மனதிலிருக்கும் வெறித்தனமான ஆத்திரங்களை வெளிப்படுத்தா விட்டால் அவனால் கட்டுப்படுத்த முடியா அளவில் கட்டுப்பாடு இழுப்பான் . வெளிப்படுத்த எத்தனித்தால் அவன் மூளை நோய் அவனின் உயிரை பிடுங்கி எறிய துடிக்கும். சாது மிரண்டால் காடு கொள்ளாது .. ஆம் சாமானியன் மிரண்டால் நாடும் தாங்காது.

எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளன் எல்லாம் போராளி என்றோ , யோக்கியன் என்றோ இருந்துவிடமாட்டான். எழுதுவது ஒரு வேடம் அவன் அந்தரங்கம் மறுவேடம் என்றிருக்கும். தினா.. இதுவரை எழுத்தாளன் என்று அவதானிக்க வில்லை. போராளியாக உருமாறுகிறான். ஒரு போராளி எழுத ஆரம்பித்தால். உண்மை எழுத்தாளர்களின் முகத்திரையும் கிழிக்கப்படும். பொய்முகமூடியில் மெய் மெய் மெய் என்று மயிர் நியாயம் பேசும் சில பல அறிவுஜீவி எழுத்தாளர்களின் முகத்திரை அவர்களின் உண்மை முகத்தின் சருமத்தோடு கிழித்தெறிய முடியும். ஒரு போராளியின் , ஒரு ஆத்திரக்காரனின் பேனா முனை என்பது வாளின் முனையை விட கூர்மையாக இருக்கும்.

நியாயம் பேசும் பிரபல எழுத்தாளர்களின் மேலாடையை அவிழ்த்து பாருங்கள்.. துர்நாற்றமெடுக்கும் நிர்வாண மேனியில் அசிங்க ஜீவன்களாய் காட்சியளிப்பார்கள்.

எழுத்துக்களால் இந்த சமூகத்தை திருத்த முடியும், மறுமலர்ச்சி உண்டாக்க முடியும். ஆனால் எழுதும் எழுத்தாளன் உண்மைக்கு போராடும் போராளியாக இருந்திடல் வேண்டும். அப்படிப்பட்ட போராளித்தனமான எழுத்தாளனாக அவதானிக்கவே புறப்படுகிறான் இந்த தினகரன், எழுதுகோலை ஏந்த கையில் துப்பாக்கி. எழுதுகோல் முனையில் சாதிக்க வேண்டியவன் துப்பாக்கி முனை காட்டி சட்டத்தை மிரட்டுகிறான். சட்டத்தை மிரட்டும் இவனை பல துப்பாக்கி முனைகள் எச்சரிக்கின்றன.

எச்சரிக்கை....!
கோபத்திலிருக்கும் ஒருவனை எச்சரித்தால் அந்த எச்சரிக்கையின் மீது எச்சில் துப்பி எரித்துவிடுவான்.

------------------


“ மிஸ்டர். தினகரன்....! . நீங்க வன்முறையை கையில் எடுப்பது தவறு. சட்டப்படி குற்றம் . துப்பாக்கி கிழப்போட்டு.. ஒழங்கா சரண்டர் ஆகிடுங்க. மாணவன் நீங்க தப்பு பண்ண நான் அனுமதிக்கமுடியாது. “ தினகரனின் செயலை பார்த்து வெளிவந்த நீதிபதி.

“வாய்யா நீதிபதி...! கருப்பு சட்டை போட்டு பெரிய பருப்பு மாதிரி பேசாதே...! மூடிட்டு போ... “ திக்குவாய் தினகரனுக்கு கோபத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டது என்ற எண்ணிய நீதிபதி...

“ தம்பி. ஒரு நீதிபதியை இழிவுப்படுத்தி பேசினா உன்மேல அவதூறு வழக்கு பாயும்... சட்டப்படி நடவடிக்கை எடுத்தா உன் படிப்பு பாழாயிடும் ,, ஜாக்கிரதை “ நீதிபதி கடுப்பாகிவிட்டார்.

“ என்னது அவதூறு வழக்கு பாயுமா ? அது என்ன புலியா சிங்கமா பாய்வதற்கு...! நான் உங்க சட்டமே குப்பைன்னு சொல்றேன்.. சரி சரி.. என் கை வலிக்குது... எங்க கலெக்டர் ? எங்க தாசில்தார். .. ? எல்லாரும் வாங்க.. என் முன்னால் நில்லுங்க. இப்போ நான் தான் நீதிபதி. நீங்க எல்லாரும் குற்றவாளி. சாட்சி என் நண்பர்கள். தண்டனை இப்போவே நிறைவேறும். மரணத்தண்டனை..!!! “


” என்னது எங்களுக்கு மரணத்தண்டனையா.. அதுவும் நீ தரப்போறீயா “ கோவை மாவட்ட கலெக்டர் ஆத்திரப்படுகிறார்.

” யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் “


“ டேய் முட்டப்பயலே.......!! “ போலீஸ்காரர் ஒருவர் எகத்தாளமாக தினகரனை நெருங்க...

தினா தன் கையிலிருக்கும் துப்பாக்கியை அழுத்தமாக பிடித்து .. “ கிட்ட வந்த சுட்டுத்தள்ளிடுவேன் எஸ்.பி யை “


நிலைமை பதட்டமடைவது கண்ட காவியா..!
தினகரனை திசை திருப்பினால் அவனை அமைதிப்படுத்தி இந்த போராட்டத்திலிருந்து அவனை வெளிகொண்டுவர வேண்டும் என்று காவியா ஒரு திட்டம் தீட்டி... அவன் அருகே சென்றாள். கையில் ஒரு ரோஜாவுடன்..!


( தொ..ட..ரு..ம் )


--------------------------------------------------------------------------------------------------------------------
பி:கு :


இனிவரும் அடுத்தடுத்த எழுத்தாளனின் கதை சிலபல அதிரடி நிகழ்வுகளுடன் பயணிக்கும். புதிய பரிணாமத்தில் ..


தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...!

நன்றி தோழர்களே

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (24-Oct-14, 2:55 pm)
பார்வை : 233

மேலே