தீபாவலி

இல்லாதவன் வீட்டில்
ஆண்டில் அநேக நாட்களில்
தீபாவளி

பட்டாசாய் கவலைகள்
வெடிக்க
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
கையெட்டும் இனிப்புகள்

தீபங்கள் கையில் ஏந்த
நினைக்க
எரிபவைகளோ
தீபந்தங்கள்


தீபாவளிகள்
கடக்கும் வேளைகளில்
தீயப்பா வலிகள்
என்ற புலம்பல்களே
மிச்சம்

எழுதியவர் : ஹாதிம் (25-Oct-14, 1:25 pm)
பார்வை : 59

மேலே