விடா முயற்ச்சி
ஒருவன் ஒருநாள் தினமும் தன் முகத்தில் சிக்கிரமாய் உதித்து,
தன் முதுகின் பின்னல் சிக்கிரமாய் மறைந்து விடும்
கதிரவனை கண்டு வியந்தான்...
மறுநாள் அவன் அந்த கதிரவனை துரத்தி சென்று
கதிரவனை முந்தி சென்று பிடிக்க வேண்டும் என்ற
ஆசையில், முயற்சியில் இறங்கினான்...
மறுதினம்:
எப்போதும் போல கதிரவனும் சிக்கிரமாய் அவன் முகத்தில் உதித்தது..
அவனும் அந்த நொடி முதல் கதிரவனை துரத்தி சென்று...
கதிரவன் சிக்கிரமாய் மறந்துவிடும் திசையை நோக்கி ஓடினான்...
ஆனால் நேரம் ஆக... ஆக... அவனை விட கதிரவன் சிக்கிரமாய் மறைந்து விட்டது..
அவன் உடனே இறைவனிடம் கோவத்தோடு கேட்டான்..
ஏன்? நான் முயற்ச்சி எடுத்து ஓடியும், என்னால் கதிரவனை பிடிக்க முடியவில்லை என்று...
அதற்க்கு இறைவன்:
யார் சொன்னது நீ கதிரவனிடம் தொற்று விட்டாய் என்று????
கொஞ்சம் பின்னல் பார்... இதுவரை உன் முகத்தில் முன்னால் உதித்த கதிரவன்...
இன்று உன் முதுகின் பின்னை உதிக்கிறது என்று...
ஆம் முயற்ச்சி செய்பவரை இறைவன்குட கைவிடுவதில்லை....