அகிம்சை என்ன செய்யும்

சென்னை மாநகரத்தின் அதுவொரு பரபரப்பான சாலையின் அருகே அமைந்த குருகியதோர் தெரு வள்ளல் பாரி பெயர் தாங்கிய பெயர்பலகை ...

அதுவொரு இனிய மாலைபொழுது ...
மதிய உணவருந்தி சற்றே இளைப்பாரல் வேண்டி வீட்டில் உறக்கத்தில் மோகன் ...
மோகனின் தூக்கத்தை கெடுப்பது போல் அமைதியான தெருவில் சற்றே பரபரப்பு தொற்றிக்கொண்டு ...எங்கும் மக்களின் கூச்சலும் குழப்பமான நிலையும்...

திடுமென விழித்த மோகனுக்கு கண்ட காட்சி ஒன்றும் புலப்படவில்லை ...
என்னாச்சு ...இன்று இத்தனை கூட்டம் ...யாரேனும் அரசியல் தலைவர்கள் தெருவில் வந்தார்களா ...இல்லை இலவசங்கள் ஏதும் வழங்குவதாக அறிவிப்பு வந்ததா ?ஏன் மக்கள் இத்தனை ஆவேசமுடன் அவனருகில் உள்ள தணிகாசலம் வீட்டின் முன்னாள் குழுமி இருந்தார்கள் ஒன்றுமே புரியவில்லை ...இடுப்பில் இறங்கிப்போன கைலியை சற்று இருக்கமாய் கட்டிக்கொண்டு ... ஆங்கரில் தொங்கிய சட்டையை மெல்ல எடுத்து மாட்டிக்கொண்டு மெதுவாய் கூட்டதை நோக்கி நடக்கலானான் ...

யார் இந்த மோகன் ...

சற்று உயரமும் வட்டமான முகமும் நெற்றி புருவங்களுக்கிடையே மிளிரும் ஒளி போல சிறு கண்கள் ஆனால் யாரையும் தன் பேச்சால் வசப்படுதிடும் முகமைப்பு காதுகள் சற்று பெரிதாய் உடல் திடம் பார்ப்பதற்கு பழைய நடிகர் ஸ்ரீகாந்த்தின் இளமை பருவத்தை நினைவூட்டுவதை போலிருப்பான் 21வயது ஆன கல்லூரி மாணவன் ஆனாலும் சிறுவயது முதலே காந்திய பற்றுதல் கொண்டு அகிம்சையே சிறந்ததெனும் எண்ணம் ஆழ்மனதூன்றி அறவழியை கொள்கை பிடிப்பாய் கொண்டவன் .அதனாலோ என்னமோ அந்த தெருவில் உள்ளவர்க்கு இவன் மீது பற்றுதலும் பாசமும் நிறையவே உண்டு .இவன் தான் இந்த கதையின் கதாநாயகன்.

நிகழ்வுக்கு மீண்டும் தொடர்வோமா ....

திருவிழா கூட்டம் போல் மக்கள் சூழ்திருக்க மெதுவாய் கூட்டதை விளக்கி முன் சென்றான் ...

கூட்டதில் பலருக்கும் இவன் நன்கு அறிமுகமே !கூட்டதை பார்த்து
ஏத்தா என்னாச்சு ஏன்?எல்லாரும் இத்தனை கோபமுடன் இவரது வீட்டின் முன் கூடி உள்ளீர்கள் ?

அந்த அநியாத்தை ஏன் கேக்குறா ?இந்த தனிக்காசலம் தீபாவளி பண்டு நடத்தி மாதமாதம் பணம் வசூலித்து இப்போது பணத்திற்கான பொருளை தராமல் ஏமாற்ற பார்க்கிறான் இவனை சும்மா விடக்கூடாது .அடித்து கொன்றால் தான் எங்கள் ஆத்திரம் தீரும். என ஏகோபித்த குரலில் ஆவேசப்பட ....அவர்களை சற்று அமைதி காக்க செய்ய போராட வேண்டி போனது மோகனுக்கு ...
அதிலும் கூட்ட நடுவிருந்து ஒரு குரல் ...
நீ என்ன அவனுக்கு ஆதரவா ?நீ என்ன வக்கலாத்தா முதலில் இவனை போன்றவர்களை அடித்துக் கொல்லனும் அப்பா தான் இது போன்ற ஏமாற்றுகாரார்கள் ஒழிவார்கள் .
ஒருகணம் அதைகேட்ட மோகன் அதிர்ச்சி அடைந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் கூட்டதைப் பார்த்து இத பாருங்க நீங்க நினைக்கிறமாதிரி அவரை காப்பத்தவோ அவருக்கு வக்கலாத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை நானும் உங்களைப்போல் இந்த பண்டில் பணம் கட்டி உள்ளேன் அதற்காக கோபப்பட்டு அவரை கொலை செய்தால் மட்டும் உங்கள் பணம் கெடைக்குமா ?என்பதை சற்று சிந்தியுங்கள் !என்று கூட்டத்தை பார்த்து குரலை உயர்த்தி வினா எழுப்பினான் மோகன் ...
சற்று நேரம் சலசலப்பிற்கு பின் அங்கே அமைதி நிலவ...
மேலும் தொடர்ந்தான் மோகன் …
இதோ பாருங்கள் அனைவருமே கஷ்டப்பட்டு உழைத்து அதை சிறுக சிறுக சேமித்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடவே பண்டு கட்டினோம் அது ஏமாற்றமாக மாறும் போது அனைவருக்கும் ஆவேசம் பிறப்பது இயல்பே !
ஆனால் ஆவேசம் காட்டினால் மட்டும் ஒன்றும் நிகழப்போவதில்லை அதே நேரம் இழந்ததை மீட்க சற்று நிதானமாக யோசித்தால் ஏதேனும் வழி கிடைக்கும் என்பதுவே என் கருத்து .நாமும் சந்தோசமில்லாமல் மற்றவர் சந்தோசத்தையும் கெடுப்பதினால் மட்டும் நமக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது .
நமக்கு இப்போது வீரியத்தை விட காரியம் தானே பெரிது .
அனைவரும் அமைதி காத்து 10 நிமிடம் உங்களில் ஒருவனாய் உரிமையாளரிடம் பேச அனுமதித்தால் அனைவர்க்கும் உரியது கிடைக்க வழிவகை செய்ய இயலுமென்ற நம்பிக்கை இருக்கிறது என்னை நம்புவீர்களா ?
சற்று நேரம் கூட்டதில் சலசலப்பும் பின் அமைதியும் நிலவ...

ஒருவர் மோகனை நோக்கி ...
இந்தா பாரு தம்பி என்னமோ இது சரியா வரும்னு தோனல ...ஆனா உன்மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அதனால நீ பேசிப்பாரு சரியான பதில் கேடைகலேனா அப்புறம் நாங்க பொறுமையா இருக்க மாட்டோம் .
அதை ஆமோதிதவனாக அனைவருக்கும் இருகரம் கூப்பி விட்டு தணிகா வீட்டு கதவை தட்டினான் மோகன்

டொக்...டொக் ...டொக்...
உள்ளே...
தனிகா....குற்ற உணர்வுடன் குடுபத்துடன் கூனி குறுகி நின்றார் .கூட்டத்தை கண்டு மிரட்சியுடனும் உடல் நடுக்கத்துடனும் மெதுவாய் மெல்ல திறந்தார் கதவு ....
அவர் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கோழி குஞ்சுகள் பருந்தை கண்டு தாய் கோழி இறக்கைக்குள் பதுங்குவது போல் ஒண்டி ஒழிவது கண்டு மோகன் மனம் சற்று கலங்கத்தான் செய்தது .
யார் இந்த தணிகாசலம் ...
ஏழு ஆண்டுக்கு முன்பாக இதே ஊரில் பிழைப்பிற்காக வந்து சிறிதாய் மளிகை கடை தொடங்கி குறைந்த லாபத்தில் பொருள் விற்று ஏரியா மக்களின் அன்பை பெற்று சிறிது சிறிதாய் நன்மதிப்பையும் நட்புறவையும் பெற்று இன்று சிறு குழந்தைக்கும் தெரியும் என்கிற அளவிற்கு அறிமுகமாகி பின் தீபாவளி பண்டு நடத்தி இன்று ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளரை கொண்டு பெரிதாய் செய்து இதுவரை யாரும் இல்லாத வகையில் நாணயமாய் செயல்பட்டு இன்றும் பலரால் இவரது பண்டில் சேர முடியாது போனதெண்ணி ஏக்கப்படும் அளவிற்கு சிறப்பாய் தொழில் செய்து வந்தவர் தான் ....ஏனோ இந்த தீபாவளி அவருக்கு சோதனையாகி விட்டது .
எனை கண்ட உரிமையாளர் ....
சற்று நடுங்கிய குரலில் ...
அவர்களை வெளியே நிற்கவிட்டு நீ மட்டும் உள்ளே வந்து வெளியே இழுத்து போட்டு அடிக்க வந்தாயா ?
ஐயோ ! என் நிலை கண்டு கருணை காட்ட கடவுளுக்கு கூட கருனையில்லையா ?நான் தான் தவறிழைத்தேன் அதற்க்கு நானே பொறுப்பாளன் எனை என்ன வேண்டுமானாலும் செய்து போ என் குடும்பத்தை ஒன்றும் செய்யாதே ! எனக் கெஞ்ச ...
உடனே மனைவி ஓடிவந்து அவன் முன் நின்று அவரை விட்டுவிடுங்கள் எனை வேண்டுமானால் கூட்டத்தின் நடுவே இழுத்து செல்லுங்கள் அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாவது என் கணவனை காப்பேன் .
ஆண்டவா !எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டாயே நாங்கள் யாருக்கு என்ன பாவம் செய்தோம் !ஐயோ !தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்ப ...
மோகனை அறியாமலே கண்ணின் ஓரம் கண்ணீர் கசிய ...
ஒன்று மட்டும் நிச்சயம் புரிந்தது .இவர்கள் ஏமாற்றுகாரர்கள் அல்ல .ஏதோ சந்தர்ப்ப சூழலில் சிக்கியுள்ளனர் என்பதை என் மனம் உணர்ந்தது .
தனிகா வை மெல்ல நெருங்கிய மோகன்
அய்யா ...முதலில் உங்கள் பயத்தை விடுங்கள் நான் ஒன்றும் செய்ய மாட்டேன் இந்த இக்கட்டிலிருந்து உங்களை மீட்கவே வந்துள்ளேன் .அதற்க்கு நான் கேட்க்கும் சில கேள்விக்கு உண்மையான பதிலை தரவேண்டும் .
உடனே ...
தனிகா ...தம்பி ...என்ன கேட்க்க போறீங்க ...எல்லாம் முடிந்து என் மானம் காற்றில் பறக்க போற நேரத்தில் என்னிடம் உள்ளது உண்மை மட்டும் தான் .அதை தவிர வேற என்ன சொன்னாலும் யார் நம்புவார்கள் .
சில நொடிக்கு பின் தொடர்ந்தான் மோகன் ...
நீங்க தீபாவளி பண்டு கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பா நடத்திவரீங்க உங்களுக்கு நிறைய அனுபவமும் உண்டு .அப்படி இருக்கையில் இந்த ஆண்டு இத்தனை குழப்பத்திற்கு என்ன காரணம் ?
அதை கேட்டதும் தணிகா அடக்கமுடியா வேதனையில் குப்பென வாய்விட்டு அழுதிட ...அவரை சற்று சமாதான படுத்திய மோகன் ...சொல்லுங்க ...நீங்க சொல்ல போற உண்மை தான் உங்களை காப்பாற்றும் ...
மெதுவாய் வாய் திறந்தார் ....தனிகா
உங்களை பார்த்த நல்லவராக தெரிகிறது எனக்கும் ஏதோ உங்களிடம் உண்மையை சொன்னால் வழி பிறக்குமென்ற நம்பிக்கையும் இருக்கிறது ...அதனாலே நடந்ததை சொல்லுறேன் ...
மாத மாதம் வசூலிக்கும் பணத்தை வட்டிக்கு விட்டு அதில் லாபம் பார்த்து பின் அந்த பணத்தை பல மடங்கா பெருக்கி அதில் வரும் லாபத்தில் ஒருபகுதியை தான் பண்டு பொருள்களை வழங்குவது வாடிக்கை .ஆனால் ...
இந்த ஆண்டு ...ஒரு பெரும் தொழிலதிபர் பேச்சை கேட்டு அதிக வட்டிக்கு ஆசை பட்டு மொத்தமா ஒருவரிடமே கொடுத்து அதற்க்கான வட்டியையும் சில மாதம் பெற்றுவந்தேன் .கடந்த மூன்று மாதம் முன்பாகவே முதலை சீக்கிரம் தாருங்கள் .தீபாவளிக்குள் அனைவருக்கும் பொருட்களை வழங்க வேண்டும் .என்று கூறியும் அதற்க்கு தொழிலதிபர் உனக்கு வட்டி சரியா கெடைக்குதா பாரு அசலை எங்களுக்கு எப்ப முடியுமோ அப்பதான் தர முடியும் ரொம்ப அவசரப்பட்டா முதலுக்கே மோசமாயிடும் என என்னையே எச்சரிக்க ...செய்வதறியாது திகைத்து போனேன் .மேலும் கந்து வட்டி கொடுப்பது குற்றம் அப்படின்னு அரசாங்க சட்டம் வேறு ?காவல்துறையிலும் புகார் தர முடியாது ?இப்படி பட்ட சூழலில் நான் பொறுத்தாலும் பண்டு போட்டவர்கள் பொறுப்பார்களா ?இதை சொன்னாலும் யாரும் நம்புவார்களா ?ஆனால் இது தான் உண்மை !
என மூச்சு விடாமல் தணிகா பேசி முடிக்க ...
சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தண்ணீர் குடித்தார் ....
மோகன் தொடர்ந்தான் ....நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள் ....
தனிகா ...ஆர்வமுடன் சொல்லுங்க தம்பி என்னால் முடிந்தால்
இவர்கள் என் மீது கொண்ட நம்பிக்கை இழக்காதிருக்கவும் எனக்கு அவமானம் நிகழாதிருக்கவும் இவர்கள் ஆவேசத்தில் சிக்குண்டு தர்மஅடி வாங்கதிருக்கவும் உங்கள் யோசனை உதவுமென்றால் என் தலையை அடமானம் வைத்தாவது நிச்சயம் செய்வேன் .
அய்யா ...தங்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி மக்களின் நம்பிக்கையை பெற்றவர் .ஏதோ சூழ்நிலை இக்கட்டில் தள்ளியுள்ளது .அதை நினைத்து குழப்பம் அடையாமல் சற்று நிதானமாக யோசித்தால் விடுபடும் வழி தோன்றும் ...
கடந்தாண்டுகளில் நீங்கள் பல லாபங்களையும் சில நஷ்டங்களையும் நிச்சயம் சந்தித்திருப்பீர்கள் .இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தாங்களிடம் உள்ள பொருளாதரத்தை கொண்டு பாதி பேருக்கேனும் உடனே பொருளை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் அப்போது தான் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும் மேலும் உங்களை ஒருவன் ஏமாற்ற பார்ப்பதற்காக நீங்கள் மக்களை ஏமாற்றிட முடியாது என்பதை உணருங்கள் .
முதலில் இதை ஏற்பாடு செய்யுங்கள் பிறகு மீதமுள்ளவர்க்கு எப்படி பொருளை வழங்க வழியுண்டு என்பதை நாளை பாருங்கள் என்று புதிருடன் முடித்தான் .
தனிகாவிர்க்கும் அவர் மனைவிக்கும் ஒன்றுமே புரியவில்லை ஆனால் ஏதோ நம்பிக்கை பிறந்தவராக தலையசைத்தார் .
மெதுவாய் எழுந்து மோகன் வாசலை அடைந்தான் .
ஆவலுடன் காத்திருந்த கூட்டதினர் மோகனை கண்டதும் மேலும் ஊற்ச்சாகமாய் முன்னேற ...
மோகன் ...கூட்டத்தை பார்த்து அமைதி ...அமைதி ...
மேலும் நடந்தவற்றை சற்று விளக்கமாய் கூற....
மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ....
மோகன் மீண்டும் தொடர்ந்தான் .உங்கள் பொருட்களை உடனே தர ஒப்புக்கொண்டுள்ளார் .அவர் ஏமாற்ற பார்க்கவில்லை அவர் சூழ்நிலை தான் காரணம் நீங்களும் அவரை வியபாரியாக பார்க்காமல் உங்களில் ஒருவராக பார்பீர்கள் என்றே நம்புகிறேன் .நாளை அனைவருக்கும் பொருட்களை வழங்க உள்ளார் அதற்க்கு நானே பொறுப்பேற்கிறேன் .அதே சமயம் உங்கள் பொருள் இழந்து விடக்கூடாது என்று எப்படி ஒத்துமையுடன் இங்கு கூடி இவ்வளவு நேரம் பொறுமை காத்தீர்களோ அதை போல நாளை ஒரு நாள் என்னுடன் வந்து பொறுமை காக்க வேண்டும் .என்ன சொல்கிறீர்கள் என கூட்டத்தை பார்த்து கேட்க ....
அனைவரும் ஆமோதிக்க கூட்டம் இனிதே கலைந்தது .
மறுநாள் விடியலில் ....
தனிகா வாசலில் அதே கூட்டம் மோகனின் வரவை எதிர் பார்த்து
மோகன் மெதுவாய் வந்து அனைவரும் அமைதியாய் இருங்கள் நான் தனிகா வை சந்தித்து வருகிறேன் என்று சொல்லி வீட்டிற்குள் நுழைந்தான்.
வீட்டில் ...
தனிகாவும் அவரது மனைவியும் மீண்டும் குழப்பமுடன் மோகனை பார்க்க
மோகன் மெல்ல சிரித்தான் ...
என்ன அய்யா இன்னும் குழப்பம் தீரவில்லையா ?பாதி பேருக்கான பொருள் தாயாரா ?
உடனே தனிகா ...ஆனால் வாசலில் மொத்த கூட்டமும் கூடி இருக்கையில் யாருக்கு வழங்குவது மீதிக்கு என் செய்வேன் ஒன்றுமே புரியாமலே ...இந்த குழப்பம்
மோகன் அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை நான் உடனிருக்கிறேன் எனது பொருளை கடைசியாய் பெற இருக்கிறேன் முதலில் பண்டு பொருட்களை வெளி கொண்டுவாருங்கள் ....பிறகு சொல்கிறேன் மற்றதை ...
சாமியாரின் பேச்சை கேட்ட சீடராக...பின் நடக்க வாசலுக்கு வந்து சேர்ந்தனர் .
மோகன் அனைவரையும் பார்த்து வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நின்று பொருட்களை வாங்கி செல்லுங்கள்
தனிகாவை அழைத்து பொருட்களை விநியோகம் செய்யச் சொல்ல
பொருட்கள் காலியாக காலியாக தனிகா இதயம் குப்பென்று வியர்க்க முடிவில் என்ன நடக்குமோ என்ற குழப்பத்தில் ....
பொருட்கள் பாதி கூட்டதுடன் முடிய ...
மோகன் மீதமிருப்பவரை பார்த்து அமைதி உங்களுக்கான பொருள் கிடங்கில் உள்ளது சற்று தாமாதமாகும்.பொறுங்கள் எனக் கூற
மீண்டும் கூட்டதுள் பதட்டம் நிலவ ...
மோகன் குறுக்கிட்டு ...நீங்க நம்பமாட்டிங்கனு எனக்கும் தெரியும் .அதனால எல்லோரும் என்னுடன் வாருங்கள்
தணிகா திகைப்புக்குள்ளாக...
இருவரும் வீட்டினுள் செல்ல ...
கோபமாய் தணிகா என்ன தம்பி இப்படி மாட்டிவிட்டுடேயே பாதி பொருள் தானே ரெடி பண்ணினேன் மீதி கிடங்க்கில் இருப்பதாய் இப்ப பொய் சொல்லிட்டியே வா கிடங்குக்கு போவோம்னு சொன்னா எங்க போறது
மோகன் உடனே ...போவோம்னு சொன்னா கிடங்குக்கு போய்டலாம் அதுக்கென்ன இப்ப கூலாக சொல்ல
ஒன்றும் புரியாமல் தனிகா தவிக்க ...
மெதுவாய் தனிகா மோகனை பார்த்து இப்ப உன் திட்டம் தான் என்ன ?
மோகன் அய்யா இந்த மக்களுக்கு அவங்க பொருள் கிடைக்கலேன்ன தான் கோபம் வரும் ஆனா அடுத்தவன் இழந்து நிர்க்கிறதென்னி வருத்தமோ ஆவேசமோ ஒருபோதும் வராது அதே போல இழந்தவன் தனியா வந்து கேட்டா மிரட்டுற பணக்கார வர்க்கம் கூட்டமா வந்தா மிரண்டு போகும் அது தான் உலக நடப்பு .இப்ப புரியுதா உங்களுக்கு ...இன்னும் புரியாமலே தலை சொரிந்தார் தனிகா
நீங்க ஏமாந்த பணத்தை கேட்க வாங்கனு கூப்பிட்டா ஒருத்தனும் உங்களோட வரமாட்டான் அவன் பணம்னா மட்டும் எல்லாத்தையும் விட்டுட்டு எங்க கூப்பிட்டாலும் வருவாங்க !
இப்ப நாம அந்த தொளிலதிபரோட வீட்டிற்கு போறோம் .நம்ம அங்க போறது தெரியாமலே கிடங்குக்கு போறோம்னு நினைச்சிகிட்டு பின்னாலே எல்லோரும் வருவாங்க !
தனிகா ...உடனே மோகனை கட்டித் தழுவி ....
தம்பி நீங்க உண்மையிலேயே இப்ப எனக்கு கடவுள் மாதிரி ....
எத்தனையோ பேர் அவங்க பிரச்சனை தீர்ந்த போதும்னு நினைக்கையில நீங்க மட்டும் இரண்டு பக்க பிரச்சனையும் தீரணும்னு அருமையா யோசிச்சிங்க ...எனக்கு என்ன சொல்றதுனே தெரியல தம்பி !
அய்யா நான் ஒன்னும் மகாத்மா இல்லை சாதாரண மனுசந்தான் மனுசங்க மனுசங்களா இருக்கிற வரைக்கு வன்முறைக்கு இடமே கிடையாது .கேட்பார் பேச்சை கேட்டு சுயபுத்தி இழந்தவந்தான் வன்முறையை கையிலெடுப்பான் .அகிம்சை அறிவை வளர்க்கும் வன்முறை வன்மத்தை வளர்க்கும் .இந்த உண்மை உடனே அறிய முடியாது .நாட்டுமருந்து போல அகிம்சை சிகிச்சை தர தர பூரணமாகக் குணமாகும் .வன்முறை ஆங்கில மருந்து அவ்வப்போது சீராக்கி உள்ளிருந்து உபத்தரத்தை கொடுக்கும் .இந்த உண்மை அறிந்தவர்கள் சிலராக இருக்க கூடும் விரைவில் வேர் ஊன்றும்.
உற்சாகமாய் கூட்டதுடன் தொழிலதிபர் வீட்டை நெருங்க ...
அனைவரையும் வாயிலில் நிற்க செய்து மோகனும் தனிகாவும் மட்டும் உள் நுழைய ...
தொழிலதிபர் அப்போது செய்தித்தாளை உயர்த்தி பிடித்து கையில் காபி சூடுபறக்க
மெதுவாய் பார்த்தார் தனிகாவை ...
ஏன்யா ?உனக்கு அப்பவே சொன்னேல்ல இப்போதைக்கு பணம் கிடைக்காதுன்னு அப்புறம் ஏயா வந்து காலையிலேயே ஏன் உயிரை வாங்குற
தனிகா ஏதோ சொல்ல வாய் திறக்க ....
உடனே மோகன் இடைமறித்து ...
அய்யா வணக்கம் .என் பெயர் மோகன் .நானும் இன்னும் பலரும் இவரிடம் தீபாவளி பண்டு போட்டு பொருள் கிடைக்காம இவரிடம் கேட்டதிற்கு உங்களிடம் பணம் தந்துள்ளதாகவும் நீங்கள் திருப்பி தர காலதமதமாகுமேன்றும் அதனால பொருள் வழங்க தமதமாகுமென்றும் இவர் சொன்னார் ...அதனால ...
தொழிலதிபர் ...அதுக்கென்ன இப்போ ?ஆமா நான் வாங்கியுள்ளேன் .அதுக்காக கண்டவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை .முதலில் நீ வெளிய போ !
தனிகாவை பார்த்து தொழிலதிபர் ...என்னய்யா ...ஆளகூட்டி வந்து மிரட்டப் பார்க்கிறியா ?அப்புறம் உன் பணம் கிடைக்காம போய்விடும் ஜாக்கிரதை !
மோகன் குறுக்கிட்டு ...அய்யா !அப்படியெல்லாம் சொல்லாதிங்க !அவரென்னபன்னுவார் பாவம் .அவரு உங்களை நம்புறார் ஆனா இந்த கூருகெட்ட ஜனங்க நம்ப மாட்டேங்குதுங்க !
தொழிலதிபர் என்னய்யா சொல்ற நீ !
அய்யா !இவருக்கு அசிங்கம் என்பது பெருசு கிடையாது ஆனா நீங்க எவ்ளோ பெரிய தொழிலதிபர் உங்கள் கிட்ட பணம் இல்லைன்னு சொன்னா இந்த மக்கள் கேவலமா பார்க்குது வேணும்னா நீங்களே கொஞ்சம் வெளிய எட்டி பாருங்களே !
மெதுவாய் நடந்து தொழிலதிபர் கண்ணாடி திரைசீலை விளக்கி வாசலை நோக்க ...
கூட்டத்தை பார்த்ததும் இதயம் நூறு சில்லாய் சிதற ...பதட்டத்துடன் சரிந்தார் இருக்கையில் ...
தனி உதவியாளைரை உடனே அழைத்து இவருடைய பணம் மற்றும் வட்டியை ஒரு பைசா பாக்கி இன்றி உடனே கொடுத்தனுப்பு முதலில் வாசலில் உள்ள கூட்டத்தை உடனே போகச் சொல்லு ....யாரவது மீடியா காரன் பார்க்கரதுக்குள்ள இவங்களை வெளியே அனுப்பு !
உதவியாளர் அவரசரமாக செயல்பட ....
இருவரும் மகிழ்ச்சியுடன் வெளிவர ....
இனிய கொண்டாட்டங்கள் எல்லோர் இல்லத்திலும் நிறக்க...
( நிறைவு பெற்றது .)

எழுதியவர் : கனகரத்தினம் (26-Oct-14, 12:47 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 307

மேலே