மனித மனம்

ஆட்டி வைக்கும் மனித மனம்..
அது ஆயிரம் நாடகம் போடும் இடம்...

சுற்றும் உலகம் போலே தினமும்..
ஒவ்வொரு பக்கம் சுழன்று விடும்...

ஆழம் அறியா உந்தன் மனம்..
அதில் எத்தனை மீன்கள் ஓடும் தினம்...

ஆயிரம் விண்மீன் ஆசை கொண்ட..
விண்ணைப்போலே உந்தன் மனம்...

ஒவ்வொரு உணவாய் மாற்றிக்கொள்ளும்..
வெற்றுப்பாத்திரம் உந்தன் மனம்...

ஆழ மரத்தின் கிளைகளுக்குள்ளே ...
எத்தனை பறவைகள் கூடு கட்டும்..

எத்தனை எத்தனை பூவுக்குள்ளே..
அத்தனை மிருகம் வாழும் வனம்...

சுழன்று சுழன்று சில்லைப்போலே..
நீ ஓட்டும் பக்கம் ஓடி விடும்...

எழுதியவர் : தோழி... (27-Oct-14, 5:28 pm)
Tanglish : manitha manam
பார்வை : 165

மேலே