சில்லறை மனிதக்காசு

எல்லா மனிதவிலங்கும்
ஒரே திசையில்
பயணம் செய்வதில்லை.

திசை வேறு வேறு
என்றபோதும்
அன்பின் முதிர்ந்த
கொள்கை உலகெங்கும்
ஒன்றே!ஒன்றே!

அறத்தின்
வழியறிந்த
வூற்றின் வேரை
உற்றுக்கவனித்தால்
திசை பிசகாத
தெளிந்த நடை தெரியும்.

தவறிழைக்காத
தவப்பிறவி
என்று எவருமில்லை
தவறு செய்து
பிழைக்க என்னும்
மனிதர்கண்டால்
வூற்றில் பிழையிருக்கென்று
உறுதிபடச் சொல்லாமல்
எப்படித்தான்
இருப்பதிங்கே.

மானிடப் பிறவியிங்கே
உயர்நிலை
என்றார் சான்றோர்
மதிப்புமிக்க
உயிரி என்று
சொன்னதெல்லாம்
மாறிப்போச்சி
மனிதம் இங்கே
காசுபனமாச்சி.

நீரில் பாலில்
நிலத்தில்
உயிரில்
கலந்து கலந்து
பணம் பார்க்க
ஆசை வந்த
மாசுமனிதன்

நிலத்தை அழித்து
நீரை அழித்து
காற்றை அழித்து
வண்டி நிறைய
பணத்தை அள்ளிக்கொண்டு
எந்த இடத்தில்
உன் சந்ததியை
வாழ வைக்கப்போகிறாய்.

அருந்தும் பாலில்
கலப்படம்
உண்ணும் உணவில்
கலப்படம்
உண்மை வாழ்வின்
உருதிப்பட்டிலும் கலப்படம்


எல்லாம் கலந்த
பின்பு -உன்
இறுதிநாளில்
கைநிறைய அள்ளிக்கொண்டு
நிலவுக்குப்போனாலும்
பூமியை அழித்த
சாகசம்தான்
உனக்கு மிஞ்சும்.

எழுதியவர் : விமல்ராஜ் (27-Oct-14, 6:28 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
பார்வை : 63

மேலே