மழைநாள் ஒன்றில்

மழைநாள் ஒன்றில் தான்
நான் உன்னை சந்தித்தேன்
மழைநாள் ஒன்றில் தான்
நானும் நீயும் நண்பர்களானோம்
மழைநாள் ஒன்றில் தான்
நீ என்னை காதலிப்பதாய் சொன்னாய்
மழைநாள் ஒன்றில் தான்
நான் உன்னை காதலிப்பதாய் சொன்னேன்
மழைநாள் ஒன்றில் தான்
உனதும் எனதும் திருமணம் நடந்தது
மழைநாள் ஒன்றில் தான்
உனக்கும் எனக்குமான குழந்தை பிறத்தது
மழைநாள் ஒன்றில் தான்
நீ இவ்வுலகை நீத்தாய்

மழைநாள் ஒன்றில் தான்
நம் குழந்த்தை நடக்க ஆரம்பித்தது
மழைநாள் ஒன்றில் தான்
நம் குழந்தை பேச ஆரம்பித்தது
மழைநாள் ஒன்றில் தான்
நம் குழந்தை மழையை காட்டி
அப்பா என்றது

நம் குழந்தை உணர்த்தியது நீ
இறக்கவில்லை மழையோடு
மழையாய் வாழ்கிறாய் என்று
நம் குழந்தை பெரியவன் ஆகும் வரை
பொறுத்திரு நானும் வருவேன்
மழையோடு மழையாய் ஆவதற்கு
இருவரும் சேர்ந்து மழைநாள்
ஒன்றில் நம் குழந்தையை பார்க்க
வருவோம்

எழுதியவர் : fasrina (28-Oct-14, 12:10 pm)
பார்வை : 112

மேலே