நீ ஓர் கனவா போதிசத்துவா

நீ ஓர் கனவா போதிசத்துவா?
உயிர் மீட்டுத் தந்து
உறவாடி வாழ்வுதனில்
அகழ் விளக்கேற்றியவன்
வாழ்வுதான் மங்கத்தொடங்கிய
நேரத்தில் பேரொளியாய் வந்தாய்....
உன் முகம் மலர
பதில் ஒன்று கூறாமல்
என் விதி என் நேசத்த்க்குரிய
ஜீவனது இதழ் உதிர்வது கண்டு
நெக்குருகி சிவந்திருந்தேன்....
வெப்பம் தனில் வறண்ட பூமி போல
எதிர் பாரா இழப்பினால்
சுரமிகுந்து நாவறண்டு தான் போனேன்
நாட்கள் நகர்வதறியாது....
இரவில் ஒளிரும்
பௌர்ணமி நிலவு போன்ற
உன் முகம் கண்டு
என் மதி மயங்கியது ஏனோ???
சுட்ட தேகத்தின்
சூடு ஆறும் முன்னே
சுளுரைத்தேன் அக்னியில்
சரணடைய நின்னை...
கொம்பு சுழன்று அடிக்கும்
சுழிக் காற்று போல
என் மனம் சுழன்று தவிக்கிறது
உன் ஒரு வார்த்தை பதிலுக்காக....
கார் மழை காணாத
கரும் பாறை போல
நெஞ்சம் கனத்துக் கிடக்கிறது
கொஞ்சும் காதல் மொழி சொல்லாயோ???
தேகம் சிலிர்த்த கோடை தூறலில்
உயிர் உறைந்து தான் கிடக்கிறது
உயிர்தெழ உன் இரு விழி பார்வை
என் கருவிழிகளில் ஊடுருவாதோ???
நெளிந்து வளைந்து
நீண்டுகொண்டே போகும்
நீல மலைத்தொடர் போல
உன் துணை இன்றி
என் பயணம் பிடிப்பின்றி
நீள்கின்றது.....
வெறும் கனவன்றி
எனை ஆட்கொண்டு
என் துயர் தீர்
கௌதம போதிசத்துவா....
எழுதியவர்
சூரியா