ஏ நட்சத்திரமே

ஏ! நட்சத்திரமே!
அனுதினமும் உன் அழகு
மெருகேறிக்கொண்டே இருக்கிறதே
நீயும் என் காதலனைப் பார்த்து
காதல் கொண்டாயோ???
என்னவரை பார்க்கும் பொழுது
ஏற்படும் வசீகரமே உனது
பிரகாசத்தின் ரகசியமோ???
என்னவரிடம் காதல் சொல்ல
பயம் கொண்டு தான் நீ
சில நாட்களில் மேகத்தைக் கொண்டு
மறைத்து கொள்கிறாயோ??? என்னைப்போல!!!
அவரின் அதி மதுர முகத்தை காண
பகலில் வந்தால், காதலில் மெய்மறந்து
உன் பணியில் கவனம் சிதறிவிடும்
என்று வர மறுக்கிறாயோ???
உனது வர்ணனனைக்கு செவி மடித்து
உனது கோடான கோடி தோழிகளும்
என் இனியவனை காண ஆவலுற்றார்களோ???
பல்லாயிரம் மைல்கல் தூரத்தில் இருக்கும்
நீங்கள் எல்லோரும் என்னை வாழ்த்துங்கள்
என் உயிரானவருள் நான் தஞ்சம் புக!!!
எழுதியவர்
Suriya Amalraj