தாரகை இவளது தேடல்
தாரகை இவளது தேடல்....
முதல் துளி மழை
அதன் எழுச்சியில் மண் வாசனை
முதல் முத்தத்தில் உச்சி முகர்ந்தாய்
முடிவில்லா காதல் மொட்டு மலர்ந்தது....
சிறு தூறல் வழுத்து மழை ஆனது
சில்மிஷ தீண்டல் தாபத்தை தூண்டியது
சீரற்ற எண்ணம் சிராய்ப்புக்கு ஏங்கியது
சீண்டிய பெண்மை சிணுங்கி சுவாசித்தது....
காரிருளில் ஓயாத மழை நீண்டது
காவியம் அறங்கேரியது மஞ்சத்தில்
கவிழ்ந்து கிடந்தது முகில் அல்லாது
கண்ணி இவளது கற்பன்றோ???
மலை நின்ற காலை பொழுதில்
நீல வானில் ஆங்காங்கு
சிந்தி சிதறி இறுக்கும்
வென் பஞ்சு மேகம் போல்
இவனது இதல் பதிந்து
இவளது தேகம்
வெளுத்திருந்தது விரசத்திலே...
செஞ்சூரிய கதிரில் பட்டு மின்னி மறையும்
புது தளிரின் நீர் திவலைகள் போல்
இவனது விழியில் ஒளிரும் பிரியமான நேசத்தில்
இவளது செவ்விழிகள் ஒளிர்ந்து மறைந்தது....
மென் தூறலை ஏற்று உள்வாங்கும்
ஈர நிலம் தன்னுள் சேமிக்கிறது உயிர்நீரை
இவனது மென்மையான அனுகுமுறையில்
ஈரம் கசிகிறது இவளிடம் உயிராய்....
மாய மழை பேய்ந்து ஓய்ந்த நிலையில்
உச்சி வெட்டாப்பில் நிர் சுறந்தது கேணிகளில்
மாய காதல் ஓய்ந்த நேரத்தில்
உச்சந்தலையில் ஞானம் சுறந்தது....
தாரகை இவளது தேடல்
தேக இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டது...
பாவை இவளது தேடல்
பூவுலகின் பொருட்கள் அன்று
பண்பட்ட நெஞ்சம்....
இளம்பூவை இவளது தேடல்
இன்னதென்று அறியாத
ஒரு ஆண் மகனின் ஆழ் மனம்...
எழுதியவர்
சூரியா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
