என்னுயிர் சொல் நீ - நாகூர் கவி
![](https://eluthu.com/images/loading.gif)
நீ செல்லு
எந்தன் நெஞ்சே...
நீ சொல்லு
எந்தன் உறவை
என்னவளிடம்.....
உன்னை பாராமலிருந்தால்
தினம் கண்ணீரால்
என் விழிகள் போர்த்தப்படும்...
உன்னை சேராமல் போனால்
அங்கு காதலின்
சுவர்க்க கதவுகள் சாத்தப்படும்....
இதை சொல்லாமல் போனால்
என் நெஞ்சம்
மேலும் வருத்தப்படும்....
நீ வந்தால் மட்டுமே
என் காதல் அகராதி
மறுபடியும் திருத்தப்படும்....
உனை தினம்
நான் பாடிட்ட
கவிதைகள் சொல்லவா....?
என் காதலை மறுத்து
நீ கோடிட்ட
வார்த்தைகள் சொல்லவா....?
உன்னில் நீ என்றாவது
என்னை நீ கண்டாயா....?
என்னில் நான் எந்நாளும்
உன்னை நான் கண்டேனே....
நீ வந்துவிடு
என் இதயத்தில்...
தந்து விடு
காதல் உதயத்தை....
கட்டி போடடி
காதல் வலியினை...
காட்டி விடடி
காதல் வழியினை....!