மழையை விட சாரலே நனைக்கிறது

ஆயிரம் வார்த்தைகளை
துணையாக்கி காதல் போர்
நடத்தலாம் என சென்றேன்...

அவள் காந்த பார்வையால்
வார்த்தைகல் அவள் பக்கம்

தனியாக நிற்கிறேன்

பேச முடியாமல் தவிக்கிறேன்
என் மூச்சு காற்றும்
சூடேறும் தூரத்தில் பதுமை

சொல்லிவிடு என அவள்
விழி கட்டைளையிட்டும்
என் மௌனம் கலையவில்லை...

வார்த்தைகள் தூண்டிலில்
சிக்கிய மீனாக
மாட்டி தவிக்கின்றன...

ஜன்னலும் மழையும் கூட
தழுவி கொண்டே பேசுகின்றன...
என்னை வெறுப்பேற்றவா...

மழையை விட சாரலே
என்னை அதிகம் நனைக்கிறது
அவளைவிட அவள் கண்ணே
என்னை கொல்கிறது...

எப்படி சொல்வேன் என் காதலை
வார்த்தையில் சொன்னால் தீருமா
மௌனத்தால் சொல்லாமல்
சொல்லவா

சில்லென விசும்
மழை காத்து காதோரம் வந்து
சொல்லி விடு என நச்சரிப்பு...

அட போங்கடா

நான் மீண்டும் எனது வார்த்தைகளை
சேகரிக்கிறேன்

கஜினி முகதுவாக அடுத்த முறையும்
வார்த்தைகளை சேகரித்து கொண்டு
காதல் போர் தொடுக்க வருகிறேன்

மழையை விட சாரலே அதிகம் நனைக்கிறது ...

எழுதியவர் : பழனி வரதன் (29-Oct-14, 3:09 am)
பார்வை : 108

மேலே