வெள்ளத்தில் மூழ்கவில்லை

மண்..மரம்..கல்..செடி..கொடி
கட்டடங்கள் ..என
தன்னை தொட்ட அல்லது தன்னால்
தொடக் கொடிய
கனமானவற்றைக் கூட
வெள்ளம் அடித்து செல்கிறது
அதனோடு..!
ஆனால்...
காற்றை ஒன்றும் செய்ய முடிவதில்லை..
அதனால்..!
மனம் காற்று போல்
ஆகும் போது..
கனம் இருப்பதில்லை..
துயர வெள்ளமும்
மூழ்கடிப்பதில்லை!
அன்பே..
நீ என் இதயத்தில்
நுழைந்த பின்பே
அது கனம் குறைந்து
காற்று போலானது!
நீ இல்லாது போனால்
கனம் கூடி
துயர வெள்ளத்தில் மாண்டு போகும்!