கடலை மிட்டாய் காதல்

மிட்டாய் வாங்கி தந்து
உன்னோடு சிநேகமானேன்
சிறு வயதில்..!
கட்டான பருவத்தில்
கடலை போட்டு வளர்த்தேன்
நம் காதலை..!
உன் அப்பன் பேச்சை
கேட்டு இன்று..
கடலை மிட்டாய்
தொழிலதிபனை
மணக்கத்தான் வேண்டுமா!
மாத்தி யோசி!
மிட்டாயோடு பத்திரிகை தந்து
கடலை காட்டாதே எனக்கு!
போய் விழு என்று!