காதலன்
தோழனே..
புயலில் நான் சிக்கிட
நீ மூழ்குவாய் !
புத்தாடை நான் உடுத்த
நீ களிப்பாய்..!
துன்பங்கள் எனைச் சூழ
நீ துடிப்பாய்!
இன்பங்கள் நான் அடைய
நீ மகிழ்வாய்..!
உரசல்கள் என் மேல் பட்டால்
நீ தீயாவாய்!
உலகத்தார் எனை வெறுத்தால்
நீ தீவாய் ஆகிடுவாய்!
இதற்கெல்லாம் காரணம்
காதலா என்றேன் !
இல்லை..
நீ... என்றாய்..!
இனி நீ என் தோழன் அல்ல!
காதலன் .. எனைக் காப்பவன்!