-- உன் மைகள்--
உன்னை காணும் முன்-----------------
நினைவும் இல்லா நிலைமை..
நிழலும் இல்லா தனிமை..
நிலவும் இல்லா கொடுமை..
காதலில் இல்லை உண்மை..
காத்திருப்பில் இல்லை பொறுமை..
காற்றில் இல்லை குளிர்மை..
வாழ்கையில் இல்லை இனிமை..
வருத்தத்தில் இல்லை வறுமை..
வானத்தில் இல்லை வெண்மை..
------------------------------------------------------
உன்னை கண்ட பின்-------------------------
என்னுள் இல்லை மடைமை..
என்னுள் இல்லை பொய்மை..
என்னுள் இல்லை தேய்மை..
என்னுள் இல்லை வன்மை..
என்னுள் பிறந்தது வலிமை..
என்னுள் பிறந்தது நேர்மை..
என்னுள் பிறந்தது கடமை..
கண்களில் பிறந்தது திறமை..
கற்பனையில் தெரிந்தது வளமை..
அழகாய் தெரிந்தது கண்மை..
காண்பதில் எல்லாம் புதுமை..
சொற்களில் எல்லாம் கூர்மை..
----------------------------------------------------------------
கவிதையே உந்தன் மேன்மை..
கவிதையே உந்தன் பெருமை..
உன் புத்துயிர் கொடுக்கும் தன்மை..
அதற்க்கு எவ்வாறு சொல்வேன் உவமை..
உன்னை பாட தந்தாய் உரிமை..
உனக்கே என்றும் நான் அடிமை....
--------------------------------------------------------------

