அன்னையும் பிதாவும்

உதிரத்தில் உயிர்க் கொடுத்து
உன் உறக்கம் நாளும் கெடுத்து
எனை அள்ளி எடுத்து
அணைத்துக் கொடுத்தாயே
பிள்ளைஎனும் புதுவடிவம்

மழைத் தாங்கும் மேகமாய்
மடித் தாங்கினாய்

உன் உதட்டில் என் புன்னகை
உலராத இதழில் உளறும் மொழி

நான் குடித்த கஞ்சியில் கரைந்திருந்தது உன் பசி
உறைந்துபோனேன் நான் உன் பாசத்தில்

அப்பா
உன் விரல் பற்றிய நொடியில்
உலகம் என் பக்கம் வந்தது

எழுதியவர் : (30-Oct-14, 7:00 pm)
பார்வை : 322

மேலே