அம்மா

வலியைத் தவிர
ஒன்றுமே தராத எனக்கு..
வாழ்க்கையினை
பரிசாய் தந்தவளே...

வாழ வழியினையும்
அமைத்தவளே..

என்னென்று சொல்ல..

யாருண்டு
உன் அன்பை வெல்ல.?

உண்ணாநோன்பு நீ இருக்க
உண்டும் போதவில்லையென
அழுதவன் நான்..

சீட்டுப் பிடித்து நீ
சேர்த்த காசுலபோய்
சினிமா பார்த்துவிட்டு
வந்தவன் நான்...

நீ கொசுவத்துல மடிச்ச
ஒத்த ரூபாய கூட
நய்சா எடுத்த
நயவஞ்சகன் நான்...

ஓட்ட விழுந்த
ஒத்த பாயில கூட
நீயொதுங்க இடங்கொடுக்கா
பாவி நான்...
துரோகி நான்...

கந்ததுணி நீ போட
வண்ணம் சரியில்லணு
நீ வாங்கித்தந்த துணிய
தூக்கிப் போட்ட
சூரன் நான்...

உன் வேர்வையில
வெந்த சோத்த...
வேகமா எட்டியுதச்ச
வீரன் நான்..

ஒன்னா..? ரெண்டா?
ஓராயிரமுண்டு...
நான் செஞ்ச கொடும...

வயித்துலயும் ஒதச்சேன்...
என்ன ஏன் பெத்தனு
வார்த்தையிலும் ஒதச்சேன்...

என்னென்ன செஞ்சாலும்
எத்துன செஞ்சாலும்..

எம்புள்ள நீதானு...
பாசமுகம் காட்டுவியே...

வேலவெட்டி இருந்தும்
ஊருசுத்துமென்ன
உலகாலும் ராசா போல...

வாயாராசா... போயாராசானு
வாயார கூப்டுவியே...

எங்கமா நீ போன?
என்னவிட்டு ஏன் போன?

இவன் திருந்தவேமாட்டானு
முடிவுபண்ணி போய்ட்டியோ?

இல்ல

நான் போனாதா
திருந்துவானு
திட்டமிட்டு போய்ட்டியோ?

வந்து தொலச்சுடுடி
வயிறு பசிக்குதடி...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (30-Oct-14, 7:25 pm)
Tanglish : amma
பார்வை : 560

மேலே