தாயின்றி நீயேது

யார்க்கு யார் சொந்தம்
யாவருமே இங்கு தொந்தம்
பிள்ளையை தாய் பேணி காத்தாள்
பிள்ளையவன் விடுதி சேர்த்தான்

தொல்லையென நினைத்தா
உன்னை ஆத்தா வளர்த்தா ?
உனக்கு தொல்லையாக
நினைத்து நீ வெறுக்க

யார்க்கு யாரிங்கு சொந்தம்
யாவருமே புரிந்திடும் தொந்தம்
பாலகனாய் இருக்கும் வரை
பாசம் நிறக்கும்

வாலிபம் வந்தால் பாசம் வெறுக்கும்
பாலாக வளர்த்த மனதில்
பாம்பின் விஷம் கலந்ததாறு
பாரபட்சம் உன்னுள் புதைந்ததெப்போ

கால்வயிறு அரைவயிறு காய்ந்து
முழுவயிரை நிரப்பிய தாயை
கால் மனமும் இல்லாது கல்லான பிள்ளை
பாரமென்று பரதேசம் போக செய்ய

மறுஅவதாரம் எடுத்து
வந்தாள் ஒரு தாரம்
தாரம் சொல்லே வேதமாக
பாரமானால் ஒவ்வொரு தாயும்

தாயில்லா இடத்தில் ஏது சொந்தம்
தமயனானாலும் தமக்கையானாலும்
தாங்கிடுமோ உந்தன் பாரம்
ஈரைந்து மாதம் கருதாங்கிய வயிறு
இறைந்திட்டால் ஏது நல்வாழ்வு !

எழுதியவர் : கனகரத்தினம் (1-Nov-14, 5:17 pm)
பார்வை : 219

மேலே