மீண்டும் அம்மா

மீண்டும் அம்மா
கதிரவனை தோற்கடித்து
அதற்க்கு முன் எழுந்தவள்
6 மணிக்கு என்னை எழுப்பி
தேநீர் கொடுத்தாள்
பல்லு விளக்கி குளிக்க போகையில்
வழக்கம் போல் துண்டை மறந்து
அம்மா என கூப்பிடும் முன்
துண்டுடன் நின்றாள்
குளித்து வரும் போது திட்டிக்கொண்டே
ஈரமான தலையை துவட்டினாள்
நான் வேலைக்கு கிழம்பும் வரை
என் கூடவே இருந்தவள் எப்போது
காலை உணவை சமைத்தாள் தெரியவில்லை
உணவில் உப்பு இல்லாததை
எப்படி சொல்லுவது
பாசமுடன் பரிமாருபவளிடம்
சாப்பிட்டு முடித்து
வேலைக்கு செல்லும் போது
வழி அனுப்பி வைத்தாள்
தெருமுனை கடக்கும் வரை
ஊர் கண்ணு என் மேல் படாமல்
வச்ச கண்ணு வாங்காமல்
பார்த்துக்கொண்டு இருந்தாள்
திரும்பி வந்ததும் காலையில்
பார்த்த அதே சிரித்த முகம்
கலையாமல் இருந்தாள்
குளிக்க போகையில் குளிராக இருக்கும்
குளிக்காதே என கட்டளை இட்டாள்
சாப்பிட நொறுக்கு தீனிகள் பல தந்தாள்
உடல் களைப்பாக இருக்கு என சொல்ல
என்ன ஏதோவென துடிதுடித்தாள்
ஓய்வு எடுத்தால் சரி ஆகுமென சொல்லி செல்ல
என் பிள்ளைக்கு கஷ்டமான வேலை தரானுங்க
எழவேடுதவனுங்கனு அலுவலகத்தைத் திட்டினாள்
சாப்பிட கூப்பிட்டு தட்டு நிறைய போட்டு
வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்
நல்லா சாப்பிட்டாதானே உடம்பு நல்லா இருக்குமென
68 கிலோ எடையுள்ள என்னை
நோஞ்சான் போல இருக்கணு
பொய்யாக திட்டி சாப்பிட வைத்தாள்
இரவு படுக்கையில் அருகில் உட்காட்ந்து
தேநீர் தந்து தூங்க வைத்தாள்
நான் தூங்கி விட்டேனென நினைத்து
கை கால் அமுக்கி கொண்டிருந்தாள்
நான் தூங்கிய பிறகும் தூங்காமல்
நான் தூங்கும் அழகை
ரசித்துக் கொண்டு இருந்தாள்
அவனென்ன குழந்தையா அவன
இப்படி பாத்துட்டு இருக்கவென
அப்பா கேட்க்க அட போங்க
அவ எனக்கு குழந்தைதாவென சொன்னாள்
சிரிச்சுட்டு அப்பா தூங்கிட
எப்போது தூங்கினால் என தெரியவில்லை
மறுநாள் காலையில் எழுப்புவாள் என
நான் படுத்து இருக்க
கைபேசியில் மணியடித்தது
அப்பொழுதுதான் தெரிஞ்சது
இவையாவும் கனவென்று
அதிகாலை கனவு பழிக்குமாம் சொல்கிறார்கள்
இனி எப்படி பழிக்கும்
அம்மாதான் உயிரோடு இல்லையே ?