பிள்ளை மனம்

நான் உள்ளிருந்த நாட்களெல்லாம் ,
எனக்கு உயிர் கொடுத்த என் சுவாசம் எங்கே ?
எனை மறந்து உறங்கிய
என் தாய் மடி எங்கே?
பால் நிலா காட்டிய விரல்கள் எங்கே ?
பால் சோறு ஊட்டிய கைகள் எங்கே?
நான் நடை போடும் அழகை ரசித்த கண்கள் எங்கே ?
அன்பில் விளைந்த என் தாய் மடி எங்கே ?
வரம் கொடு வரம் கொடு இறைவா ..........
இன்னும் ஒருமுறை என் அன்னை மடி பார்ப்பேனா ?
மீண்டும் ஒருமுறை என் தாய் முகம் பார்ப்பேனா?