தாயின் அன்பு முத்தம்

நான் கருவறையில்
உதித்த பொழுதே
உறக்கம் களைந்து,
என் பாத தீண்டலை
தொட்டு ரசித்து
புன்னகை பூத்து,
விழியை காக்கும்
இமையாக மாதம்
பத்து சுமந்து,
என் பிறப்பில்
கொடுத்த வலியை
சுகமாக ஆனந்த
கண்ணீர் கொண்டு
என்னை கைகளில்
அள்ளி பிஞ்சு கண்ணங்களில்
வைத்த அந்த அன்பு
முத்தம் என் வாழ்நாளில்
நான் இழக்காத
பொக்கிஷம்....!!

எழுதியவர் : கலைவாணன் (2-Nov-14, 7:39 pm)
சேர்த்தது : கலைவாணன்
Tanglish : thaayin anbu mutham
பார்வை : 905

மேலே