சிந்தனைச் சிதறல்கள்31-10-14
பேனையின் மூடிபோல்
பேதமை!
கல்விக் கைகொண்டு
திறந்திடு!
கருத்துக்கு ஆடைகட்டி
உலவ விடு!
நாகரிகம்
நடைபயிலுதல் என்ன?
நடனமே ஆடலாம்!
========================== =
இன்று என்ற எனது காதலியை
எனக்கு அறிமுகம் செய்தவள்
நேற்று என்ற எனது தாயே!
நாளை என்ற என் குழந்தையை
இன்றென்ற காதலியே
அறிமுகம் செய்வாள்!
உறவுகள்
என்னைவைத்துப் பின்னப்படும்
சங்கிலித் தொடர்களே!
=========