வெண்ணிலாவே

தேடி அலுத்தவளோ
வெண்ணிலாவே!
மேகத்
தூளியில் ஓய்வெடுப்பாய்
வெண்ணிலாவே!

ஓடி ஒளிவாயோ
வெண்ணிலாவே!
அவள்
உடலைப்
பார்த்தவளோ
வெண்ணிலாவே!

கூடித் தவழுதியோ
வெண்ணிலாவே!
கலைக்
குழந்தையைக்
குலவினையோ
வெண்ணிலாவே!

சேடிப் பெண்களுமோ
வெண்ணிலாவே!
உன்னைச்
சுற்றி
மினுக்கிடுவார்
வெண்ணிலாவே!

பாடி இசைப்பதும்,ஆர்?
வெண்ணிலாவே!
என்போல்
பேடையை இழந்தவனோ,
வெண்ணிலாவே!
=== -- ===

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (31-Oct-14, 12:29 am)
பார்வை : 61

மேலே