கவிஞன் ஆவோம்

காதலைப் பாடுவோம்
கருவாட்டைப் பாடுவோம்
கண்ணீர் தருமந்த
காட்சியை மறந்திடுவோம்

காமம் பாடுவோம்
ரோமம் சிலிர்க்க வைக்கும்
சாமம் பாடுவோம்
சத்தியத்தை விட்டிடுவோம்

புகழை பாடுவோம்
பூண்டை பாடுவோம்
நிகழும் நிசத்தை
நிச்சயம் நாம்மறப்போம்

மழையைப் பாடுவோம்
மகிழ்ச்சி பாடுவோம்
மண்ணால் விண்ணால்
நடப்பதை விடுவோம்

கவிதை பாடுவோம்
கைதட்டி ஆடுவோம்
கணமிதில் நடக்கும்
கச்சேரி தவிர்ப்போம்

கவிஞன் ஆவோம் !!!

எழுதியவர் : அபி (31-Oct-14, 12:53 am)
பார்வை : 84

மேலே