உத்திரவாதம்
கத்தி பேசக் கூடாது..
கை நீட்டக்கூடாது ..
குறை சொல்லக் கூடாது..
கூப்பாடு போடக் கூடாது..
ஆத்திரம் வரவே கூடாது..
அழவைத்து பார்க்கக் கூடாது..
கேள்விகள் கேட்க கூடாது..
குட்டினாலும் அழக் கூடாது ..
இத்தனையும் ..
ஒழுங்காக செய்து வந்து..
பராமரித்தால்
நன்றாக ஒத்துப் போவாள்
குடும்பத்தில்..
வாரண்டீ சர்டிபிகேட்
தந்தார்கள்..
மணப்பெண்ணை வீட்டுக்கு
அனுப்புகையில்!
தரகரைத்தான்..காணவில்லை..
பார்த்தால் வரச் சொல்லுங்கள் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
