இறைவனுடன் உரையாடும்

வெள்ளிக்கிழமை தொழுகை
பள்ளி நிறைந்திருந்தது
இன்று மட்டும்தான்
எப்போதும்!

மற்ற நாட்களில்
தொழுதல்
மகத்துவமில்லை போலும்...

வேலைகள் நிறைய !
நேரமே கிடைக்கல!
எப்போதும் நினைக்கிறது தான்!
நாளைக்கு இன்ஷா அல்லாஹ் !

காரணங்கள் கைவசம் !
உண்மைதானா தோழர்களே?
உணர்ந்துதானா சொல்கிறீர்?

தொழுகையின் நோக்கம்
வெறும் நன்மைபெறுதலா ?
துவங்கி முடிக்கும்
தெய்வ பூஜையா ?

இல்லை !!இல்லை!!
இறையிடம் முறையிடும்
வேட்கைமனு தாக்கலா?
இல்லை!! இல்லை!!

உளமார முன்னிறுத்தி
உலகாளும் இறைவனுடன்
உரையாடும் தருணம் அது !

வாய்கொண்டு முணுமுணுக்கும்
மந்திரத்தால் வாய்க்காத
வரம்பெறும் வாய்ப்பு அது!

உள்ளக் கண்ணாடியின்
இரசப்பூச்சு நிகழ்த்தும்
இரசவாத மாற்றம் அது!

கைகளை கட்டித்
தரைபார்த்து
குனிந்து நிமிரும்
யோகநிலை அதுவல்ல ...!

படைப்புகளை தவிர்ந்து
படைத்தவன் பார்க்கும்
பக்குவம்தரும் பயிற்சி அது!

நாளுக்கு ஐவேளை
நமக்கு நாமே
உணர்வூட்டிக் கொள்ளும்
உன்னத செய்கை அது!

நபில் தொழுகைகளும்
நயமாய் உண்டு !!
பக்கமிருக்கும் இறைவன்
இன்னும் பக்கமாகும்
இனிய சுகப்பொழுது!

சஜ்டாஹ் விரிப்பில்
நிற்கும் பொது
சாத்தியப்படும் சந்திப்பில்
சகலத்தையும் , சகலத்தையும்
பின்வைத்து முன்னேறு !

உனக்கும் வசப்படும்
உண்மைத் தொழுகை !..
எல்லா பொழுதும்
இனிய பொழுதே !

அவன் அங்கேயே இருக்கிறான்!
நாம்தான் ,
எங்கேயோ தேடுகிறோம் !!

எழுதியவர் : அபி (31-Oct-14, 3:52 pm)
பார்வை : 391

மேலே