குட்டி பெண் நான்

சுட்டிப்பெண் நான்
ரொம்ப
குட்டி பெண் நான்
கரும்பை போன்றது
என் மனம்
இரும்பை போன்றது
என் பலம்
சோகத்தை துவைப்பேன்
துணியை போல
பாவத்தை மிதிப்பேன்
காளி(கடவுள்)யை போல
துரத்தி அடிப்பேன் எதிரிகளை
சேர்த்து அணைப்பேன் நண்பர்களை
சுழல்கின்ற பூமி நான்
சுத்தமான நீரும் நான்
சுகமாய் யாவரும் வாழ்ந்திடவே
சுவாசம் தரும் காற்றும் நான்...!!
அட என்னை பற்றி என்ன சொல்ல
குட்டி பெண் நான் ரொம்ப
சுட்டிப்பெண்.....!!!!