பெயர் சொல்

அண்ணா மேம்பாலம்..
ராஜாஜி மண்டபம்..
காமராஜர் விமான நிலையம்..
காந்தி மண்டபம் ..
கலைவாணர் அரங்கம்..
நேரு பூங்கா..
விளையாட்டரங்கம்..
என்றெல்லாம்
தான் விரும்பியவைக்கு
பெயர் வைத்து
பெயர் கொண்டவர்களை..
போற்றும் தமிழன்..
ஒரு பெண்ணை ..
போற்றுதற்கா பெயரிட்டான்..?
குஷ்பு இட்லி என்று!
தமிழனின் மதிப்புணர்வும்
மனித நேயமும்
குறைத்திடும்
இந்தப் பெயர்களை
இனியேனும்
நீக்குவானா ..
தமிழன் !
விரும்பும் இட்லியைக் கூட
தைரியமாக கேட்க முடிவதில்லை..!