எனக்குள் நான்

நினைவுகளைத் தூசுதட்டினேன்
பளிச்சென்று தெரிந்தது
நான்

எத்தனை மாற்றங்கள்
எத்தனை தோற்றங்கள்
மாறிக் கொண்டே !

சிலதில் வளர்ச்சி
பலதில் பின்தங்கி...
எதார்த்தம்!

வாழ்ந்தேனா தெரியாது
முயற்சி செய்திருக்கிறேன்
புரிகிறது ...

வலிகள் ஆங்காங்கே!
வழிகளும் அதுவே
ஆறுதல் ..

உதவிகளைக் கொடுத்து
வாங்கியதில் நடந்த
வாழ்க்கை வியாபாரம் ..

இலவசமாய்க் கிடைத்த
முதலீடு !
நட்டமேதுமில்லை !!

சுகங்கள் சிறுபான்மை!
இரசித்து சுகித்ததால்
பிரசவித்த கவிதைகள்...

கண்டுகொண்ட உண்மைகள்
வெளிசொல்ல முடியாத
தவிப்புக்கள் ...

பொய்யென்று தெரிந்தும்
புகழ்ந்த பழைய
வார்த்தைகள் !

கூட்டம் கூட்டிகூட்டி
இறுதியில் பெற்ற
தனிமை...

நிறைவேறாத ஆசைகள்
நிறுத்தப்பட்ட முயற்சிகள்
நிம்மதிதான் !

அன்பிற்கு ஏங்கிய
அந்த கொடுமைமிகு
நாட்கள் ..

மாட்டிக் கொண்டும்
மாட்டிவிடப் பட்டும்
எதிர்கொண்ட சதிகள்....

பேசாத மௌனங்கள்
தந்த உதவியால்
வந்த வரங்கள்...

இறுக்கி வைத்திருந்த
கொள்கை ...
இறந்துபோன நேரங்கள்...

அர்த்தமுள்ள கண்ணீர்கள்
அர்த்தமில்லா கவலைகள்
அர்த்தப் பட்ட நான்!

எழுதியவர் : அபி (31-Oct-14, 10:52 am)
Tanglish : enakkul naan
பார்வை : 2333

மேலே