நட்பின் சான்று - உயிர் தோழிக்காக

நட்பைக் கோர்த்து கவலைகளை புதைத்து ,
உனக்காய் ஒரு கவிதை ,
என் உயிர் பிரிந்தாலும் ,
உன் நட்பை போற்றி கொண்டே, "நட்பின் சான்றாய்"..!!
.
முகம் பார்த்து பழகியது இல்லை,
முகநூலில் தான் பழகினோம்!
.
ஊர் ஊராய் சுற்றியது இல்லை, ஆனாலும்
ஊற்று நீராய் பெருகியது நம் நட்பு !!
.
ஆயிரம் சோகங்கள் உனக்குண்டு , ஆனால்
அத்தனையும் மறந்து சிரிப்பவள் நீ !
.
தன்னம்பிக்கையின் தலைநகரம் நீ
தன்னலமற்ற சேவகி நீ !!
.
பிறர் இன்பத்தில் தன் இன்பம் கண்டவள் நீ, ஆனாலும்
புரியா புதிராய் உன் வாழ்க்கை !!
.
போலி அன்பினால்
புதைந்து போன உன் இன்பங்கள்,
.
உண்மையான நட்பினால் ஒரு நாள்
உன் பெயர் சொல்லி நிற்கும் !!
.
நினைக்கும் நட்புகள் பல, ஆனால்
நிலைக்கும் நட்போ உன்னை போல் சில!!
.
நண்பர்கள் பல இருப்பினும்,
"நட்பின் சான்றாய்" நீ மட்டுமே என் தோழி !!
.
M.ARAVINTH,
BE- MECHANICAL FINAL YEAR,
C.S.I INSTITUTE OF TECHNOLOGY
THOVALAI - 629302
KANYAKUMARI DISTRICT.
.
MY CONTACT
MOB NO; 9043932759

எழுதியவர் : அரவிந்த் (1-Nov-14, 3:25 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 95

மேலே