மழையேமழையே

வானத்து மேகக் கூட்டம்
திரளுகின்ற நேரம்..
அவள் வந்தாளே!
சில்லென்று வாடைக் காற்று
என் மீது வீசுதே!
மனம் கொள்ளை போகுதே!
மயக்கத்தில் மூழ்குதே!

மழை பெய்யப் போகுதென்றே
நெஞ்சத்தில் நுரை பொங்குதே
என்னவளைத் தொட்ட காற்று வந்து
இன்னும் குளிரச் செய்ததே!
வரவேண்டும் நீ..மழையே நீ
நனைப்பாய்..நீ..அவள் தாவணி!
தர வேண்டும் நான்..
புது மேலாடை..
அவள் போய் விடுவாள்.. நீ..
நின்று விட்டால் ..அதனால்..
தொடர்வாயே .. என் மழையே..!
வருவாயே.. தினம் தினமே!
அவள் வரும் பாதை.. இதுதானே!

எழுதியவர் : கருணா (1-Nov-14, 3:24 pm)
பார்வை : 134

மேலே