நம் சமுதாயம்

நாம் !
செருப்பு தைப்பவனுக்கு
சாதி கொடுத்தோம் ;
அதை விற்பவனுக்கு
கொடுத்தோமா ?

உழுபவனுக்கு அறுப்பவனுக்கு
சாதி கொடுத்தோம் ;
அதை உண்பவனுக்கு
அவன் அருமையை
எடுத்துரைத்தோமா ?

குடிசைத் தொழிலாய்
செய்தால் குற்றம்
என்கிறோம் ;
மதுவை ஆலைகட்டி
காய்ச்சினால் அனுமதி
தருகிறோம் ?

என்ன சமுதாயமடா இது ?
குமட்டிக் கொண்டு வருகிறது
கேடுகெட்டவர்களை நினைத்துவிட்டால் ..

வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (2-Nov-14, 4:18 pm)
பார்வை : 64

மேலே