புரிந்தும் புரியாதது

புரிந்தும் புரியாதது
ஆறறிவு இருப்பது
சுயநலம் பேணவே
என்றெண்ணும் மனிதர்களே
சாதீய அமைப்பை
சரியெனும் ஏழாமறிவாளிகள்
உலகிலுள்ள மனிதரெல்லாம்
பூகோள அடிப்படையில்
அறிவியல் ஆய்வுப்படி
ஐந்தினமாய்ப் பிரிந்து
ஆங்காங்கே வாழ்கின்றார்
மொழியும் நிறமும்
உண்ணும் உணவும்
உடுத்தும் ஆடையும்
இயற்கையோடு ஒன்றியே
மனிதருக்கு அமைந்தன
மதம்வந்த விதம்பற்றி
ஆராய்ந்து பார்த்தால்
அதில் புதைந்த உண்மைகள்
சுயநலக் கண்ணிவெடிகளாய்
வெடிக்கும் விதம் தெரியும்
எங்கும் நிறைந்தவன்
நமக்குள்ளும் இருப்பதை
உணரவைத்து மக்களை
ஒருங்கிணைக்க வந்ததுவே
சாத்திரமும் சடங்கும்
திசைமாறிப் போகவைத்து
வேற்றுமைகள் படைக்கவே
பிரிவினைகள் பலவடிவில்
சுயநலம் பெற்றெடுத்த
செம்புலச்# சிந்தனைகள்
ஆறறிவும் மனச்சாட்சியும்
நம்மோடு இருக்கையில்
வேறென்ன வேண்டுவோம்
நல்லவராய் வாழ்ந்து
தீமைகளைத் தவிர்ப்பதற்கு?
# அழிக்கக் கூடிய, தீங்கான, கேடு தருகிற = destructive
Johann Friedrich Blumenbach divided the human species into five races in 1779, later founded on crania research (description of human skulls), and called them (1793/1795):
• the Caucasian race
• the Mongoloid race
• the Malay race
• the Negroid race
• the American race