பயம்

மனிதர்கள் அனைவரும் ஒரு ஒரு விஷயத்திற்கு பயம் கொள்வோம் . சிறு வயதில் இந்த உணர்வு அதிகமாய் இருக்கும். நாளடைவில் வாழ்க்கையின் அனுபவங்கள இந்த உணர்விலிருந்து நம்மை வெளி கொண்டு வந்து விடும்.

பயத்தை போக்க பயப்படமால் இருப்போம் !

பயம் என்பது ஒரு கற்பனை தான் நிஜம் அல்ல. இந்த கற்பனா சக்தி அதிகமாய் உள்ள போது மனிதனுக்குள் பல விதமான ரசாயன மாற்றங்கள் ஏற்படும் .. . பொதுவாய் ஒரு மனிதன் பயப்படும் போது இதயம் துடிக்கும் உள்ளங்கையில் வியர்க்கும் படபடப்பு அதிகரிக்கும் . இவை பயத்தின் அறிகுறிகள் : இந்த பயத்தை வெல்வது எப்படி ?

முதலில் இந்த பயம் கொடுக்கும் உணர்வுகளை நம்மிடமிருந்து தள்ளி வைப்போம் . உடல் அமைதி பெற்றால் உணர்வுகள் சமன் நிலைக்கு வந்து விடும்.

இரண்டவாதாய் செய்ய வேண்டியது இறுதியாய் என்ன நடந்து விட போகின்றது ? என நம்மை நாமே கேட்டு கொண்டால் விடை தெரிந்து விடும். வாழ்க்கையில் நல்லதும் கேட்டதும் கண்டிப்பாய் மாறி மாறி வந்து தான் செல்ல வேண்டும் . அதனால் மனம் ஓரளவு தயாராய் விடும்.

மூன்றாவதாய் யாருமே ஒழுங்கு இல்லை . எல்லாவற்றிலும் ஒழுங்கு எதிர்பார்க்க படும் போது ஒரு பயம் வரும். நாம் செய்வது சரியா இல்லை தவறா என ? நம்மால் முடிந்த அளவு தெளிவாய் எந்த வேலையையும் செய்தால் ஒரு தெளிவும் தன்னம்பிக்கையும் ஏற்படும். இது பயத்தை களைந்து விடும்.

நான்கவதாய் பயத்தை எதிர் கொள்ள வேண்டும். எதிர் கொள்ள எதிர் கொள்ள பயம் நம்மை விட்டு விலகி விடும்.

அடுத்து பய உணர்வை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் அந்த உணர்வின் வீரியம் குறைந்து விடும்

இறுதியாய் நம்மை நாமே பாராட்டி கொள்ள வேண்டும் நம்மின் ஒவ்வொரு சிறிய சிறிய சாதனைகளுக்கும் . இது தன்னம்பிக்கையை வளர்த்து இந்த கற்பனையான பயத்திலிருந்து நம்மை விலக்கி நிஜமான வாழ்க்கையை எளிதாய் எதிர் கொள்ள நம்மை தயார் படுத்தி விடும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பயத்தை போக்க பயத்தை எதிர் கொள்வோம் !!!

எழுதியவர் : kirupaganesh (2-Nov-14, 10:38 pm)
Tanglish : bayam
பார்வை : 967

மேலே