மன்னிப்பு வேண்டுகிறேன்
தள தோழமையர் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் !
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த தளத்தில் சிந்திக்க விடுங்கள் என்ற தலைப்பில் என் படைப்பை பதிவு செய்திருந்தேன் பல தரப்பட்ட கருத்துக்கள் , கேள்விகள் யாருடைய கருத்துக்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை … ஆனால் மன்னிப்பு கேட்க விரும்பிகிறேன் அந்த படைப்பை எழுதும்போது இஸ்லாமை பற்றி குறை சொல்ல வேண்டுமென்றோ அவர்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வதற்கோ நான் எழுதவில்லை நான் குறிப்பிட்டது மனிதர்களை எண்ணத்தில் கொண்டே . இஸ்லாம் என்ற வார்த்தையையும் படத்தையும் தான் பயன்படுத்தினேன் … என் கண்கூடாக பார்த்த ஒரு நிகழ்வு நான்கு ,ஐந்து வயது பிள்ளைகளை தெருவில் இறக்கி கோஷமிட பழக்கி கொண்டிருந்தார்கள் அது வேண்டாம் என்று சொல்வதற்காக மட்டுமே அந்த இடத்தில அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் ..ஆனால் தவறு என் பெயரில் தான் நான் சொல்ல வந்தததை விளக்கமாக சொல்லி இருக்க வேண்டும் நான் அரை வேக்காடு தான் … உங்கள் மன உணர்வுகளை காயப்படுத்தியதற்கு மன்னியுங்கள் என் படைப்பை நான் நீக்கி விட்டேன் …. ஒரு சிறு வேண்டுகோள் யாரவது ஒருவர் படைப்பை எழுதினால் அதில் உங்களுக்கு தவறு என்று தோன்றும் வரிகளுக்கு முதலில் விளக்கம் கேளுங்கள் இல்லையேல் அவர்கள் மனம் புண்படாத வகையில் தவறை சரி செய்யுங்கள் நீங்கள் எல்லாம் தெரிந்தவராக இருக்கலாம் எழுதியவர் எதுவும் தெரியாதவராக இருக்கலாம் தெரியாதவற்றை தெரிந்துகொள்ளவும் தெரிந்தவற்றை பெருக்கிக்கொள்ளவும் தான் இந்த தளம் என்று நினைத்தேன் ....ஆனால் உங்கள் கிண்டல் கேலிகளுக்கும் கடும் வார்த்தைகளின் எச்சரித்தளுக்கும் இந்த தளம் உதவுகிறது...என்னை அது எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை இருப்பினும் … என்றோ பதிவிட்ட என் எண்ணத்திற்கு படைப்பை சம்மந்த படுத்தியும் சில கருத்து துளிகள் விழுந்தன … அது வேண்டாம் என்று சொல்ல நினைக்கிறன் நீங்கள் பெரிய படைப்பாளிகள் என்றால் எல்லாம் தெரிந்தவராக இருந்தால் எங்களை போல் தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுத்தால் எப்படி எழுத வேண்டுமென்று சொல்லி கொடுத்தால் நலமே அதை விடுத்து உங்கள் ஏளன வார்த்தைகளை கொண்டு முடக்கி விட வேண்டாம் .... எழுதியதில் ஏதேனும் பிழை இருப்பின் மன்னியுங்கள் உங்கள் கற்பனையை விரிவுபடுத்தி இதற்கும் ஒரு கூட்டத்தை கிளப்பி விடாதீர்கள் ....