மலேசியா துணைஅமைச்சர் டத்தோ எம் சரவணன்

நேரில்நான் பலமுறை கண்டுமுன்னை
******நேசமுடன் இதுவரைக்கும் பேசவில்லை
நேரியஉன் தமிழ்பற்றை நெஞ்செமெல்லாம்
******நினைந்துன்னை இங்கிருந்தே போற்றுகின்றேன்
யாரிருக்கார் உனைப்போல தமிழுக்காக ?
******யாத்திரைபோல் மொழிபோற்றி பயணம்செய்ய
ஊரிருக்கும் தமிழ்த்தலைவர் ஊடேமின்னும்
******ஒப்பற்ற சரவணரே உன்பேரோங்கும்!

மழையெனவே தமிழ்பொழிவாய் மலைத்துபோனேன்
******மக்கள்நலம் பேசுகிறாய் மகிழ்ந்துபோனேன்
அழைத்தணைத்தாய் என்குருவை அறிந்தேநானும்
******அணைத்திடத்தான் துடித்திட்டேன் அன்பாய்நாளும்
முழக்கமிடும் அருட்கவிஞர் சீனிநைனா
******முகமதுவின் அகமதுவில் வாழ்ந்தாய்நீயே!
பழக்கமில்லை என்றாலும் பரவாஇல்லை !
******பவமற்ற ஆறெழுத்தோய் பண்பாய்வாழீ!

எழுதியவர் : அபி (2-Nov-14, 11:45 pm)
பார்வை : 110

மேலே