என் காதல் அலைபேசியுடன்

மந்திரித்த திருநீராய் தலையனைக்கு அடியினிலே – நகரை
வலம் வரும் நவீன கண்ணகிகள் கையினிலே – வாலிபர்
தினமணியும் கால்குழாய் பையிலே - ஆசான்
கண் மறைவாய் காலுரையுள் ஒளிக்கின்றாய் காதலியே.
பாண்டவர் காலத்தில், காதலியே நீ இருந்தால்
பாஞ்சலி அழைத்திருப்பாள்; கண்ணணவன் விரைந்திருப்பான்.
நூற்றண்டுக் கண்டெடுத்த சேவகன் நீயாவாய்,
எந்நாளும் கண்டதில்லை (தன்னைச்) சுமக்கவைக்கும் சேவகனை.
தூது செல்ல ஆளைத்தேடி தொடுத்தப் பண் மறந்தேன்
தூதுவன் உள்ளதனால் பண் எடுக்கத் துனிந்தேன்-வாசு
தேவருக்கு வழி விட்ட சமுத்திரமும் உண்டு
வழியிருந்தும் பெருங்கடலாய் போன தேசமடி இன்று
எந்த ஒருதிக்கிலும் தொலைந்து தான் போனாலும்
வீட்டுவழிக் காட்டிடுவாய்; கைக்குள்ளே அடங்கிடுவாய்.
மின்வெட்டு நேரத்தில் தீவட்டி ஆகிடுவாய்
சின்னஞ்சிறு கணக்கிட்டு சோம்பேறி ஆக்கிடுவாய்
பதறிவிடும் பிரசவத்தில் நூற்றிமூன்றும்(103) ஆனாய்
கண் இழந்த மாந்தருக்கோ பாசக்கரம் தந்தாய்
கண்டக் கண்ட நேரத்தில் ‘சிரி’யென்றுச் சொல்லி
குழந்தையை விட்டொழித்து படமேடுத்து ரசிப்பார்
படத்தினிலே மனம் லயிப்பார்!
நூற்றாயிரம் மையில்கள் வரை மழலைக் குரல் கேட்டு – தந்தைக்கு
கண்கலங்கும், தாய் மனமோ கனத்திடுமே!
இளமையில் காதல் சகஜம் - ஆனால்
கையுடன் ஒன்று பையுடன் ஒன்றா?
தலையனையில் கிடந்திடுவாய்; சுப்ரபாதம் படிப்பதிலோ
இரண்டாம் தாயடி நீ!
ஆண், பெண்ணாய் மாறுவது வியப்பா? – தினம்
எந்தன் காதலியை ‘அவன்’ என்றழைக்கும் நான்தான் வியப்பு
காதலியை கொஞ்சும் நேரம் - என்
கணக்கில் பணமின்றிப் போகும்
பணம் போட்டு தொடர்புகொள்ளும் நேரம்
உன்னை அனைத்திருப்பாள்;என்னை நிந்தித்துப் புலம்பிடுவாள்
சத்தமிட்டு நச்சரிப்பாய், உன்னை எளிதில் அனைத்திடுவேன்
உன்னைப் போன்ற மனைவியிங்கு எவனுக்கு கிடைக்கும்
வேலைபலுக் காரணமாய் நகைக்கடைக்கு போகவில்லை
மனைவி முகம் வாடிடுமே; உணவின் ருசி காட்டிடுமே
நீயும் மனைவிதான் – மின் இனைப்பில் இனைக்கவில்லை
உன் முகமும் வாடிடுமே!
ஆகப்பல நற்பணிகள் அளவின்றிச் செய்தாய் – சிட்டுக்
குருவிகளின் வாழ்கையினை பறித்திடவும் செய்தாய்
வேறு என்ன நேர்ந்திடுமோ?
இன்னும் என்ன நிலை வருமோ?
பெயர்: கௌதம்.சு (9677024063)
4-ம் ஆண்டு B.E. (ECE)
கல்லூரி: சிவா இன்ஸ்டியூட் ஆப் பிராண்டியர் டெக்னாலஜி,
(SIVA INSTITUTE OF FRONTIER TECHNOLOGY)
337/1ஆ,வள்ளல் ஆர்.சி.கே. நகர்,வெங்கல்,திருவள்ளூர்-601 103.
வீட்டு முகவரி: எண்: 46, கிருஷ்ணா காலணி, கவரபாளையம், திருநின்றவூர்,
திருவள்ளூர்-602024