நான் தொலைபேசி பேசுகிறேன்

நான் இல்லாத இடம் இல்லை என்னை ரசிக்காதா மனிதர் இல்லை "
மற்றவர் கதை பேசும் ஊடகம் நான்
காதலர்களுக்கு கடவுள் நான் "
ஜாதி மதம் பேதம் இல்லாதவன் சந்தையிலே சாதரணமாக வசிப்பவன் நான் "
எண்ணப் பார்க்க தினம் தினம் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்ல பல வண்ணத்தில் அவர்களுக்கு பார்வயளிக்கும் பகுதி நேர திரையரங்கம் நான் "
பலர் கஷ்டத்திலும் கூட இருப்பவன் சிலர் புன்னகையும் பார்த்து ரசிப்பவன் அனைவரின் கண்ணீரையும் துடைப்பவன் ஆளில்லா இடத்திலும் பேய்கள் நடமாடும் நேரத்திலும் பெண்களுக்கு துணை நிற்கும் துணிச்சல் காரன் நான் "
மரண செய்தியின் மாகிழ்ச்சி செய்தியின் உளவாளி நான் "
பிரதமர் முதல் பிச்சைக்காரன் வரையில் ஒருரே பிரிவுக்கான நண்பன் நான் "
மொத்தத்தில் நான் இல்லாமல் சுகம் இல்லை சூழல் இல்லை மனங்கள் இல்லையே இம் மண்ணில் "