எப்படி வேண்டுமானாலும்

இரண்டு பேர் வாகனத்தில்
மூன்று பேர் போகலாம்..
அளவின்றி பேருந்தில்
தொங்க வைத்து ஓட்டலாம்..
சாலைகளில் சிறுநீரும் கழிக்கலாம்..
கண்டபடி கட்சிகள் மாறலாம்..துவக்கலாம்
இடது வலது இல்லாமல் வண்டி ஓட்டலாம்
நிற்கின்ற காரில் கோடு போடலாம்..
கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தலாம்..
எங்கும் குப்பை போடலாம்
எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்..
ஏனென்றால்..
சுதந்திரத்தை முழுமையாக
அனுபவிக்க வேண்டும் என்பதால்!