ஒன்றுமில்லை

ஒன்றும் இல்லை உணர்வாய்
உன்னுள் ஆழ்ந்து - அகிலமும்
அண்டமும் அதற்கப் பாலும்
பரந்த தெனினம் சூனியமே

காதலும் காமமும் தேடலில்
மோதலும் வேகமும் - முடிவில்
யாதில னென்று உணர்வாய்
ஆதலில் அமர்வாய் மனதுள்

ஆணாய் பெண்ணாய் குழவியாய்
யாராய் இருப்பின் உன்னுள்
யாதொன்றும் இல்லை - மனதில்
ஆழ்ந்து எண்ணிக் கணிப்பாய்

முன்னும் ஒன்று மில்லை
பின்னும் ஒன்று மில்லை
வேதனை யென்று இல்லை - மீறும்
சாதனை யொன்று இல்லை

உயர்ந்த சிகரம் எல்லாம்
ஆழ் பள்ள மின்றி சமனே
உயர் வென்று ஒன்று இல்லை
தாழ் வென்று ஏதும் இல்லை

அணுக்களின் கூட்டே நாமெனில்
அனைத்தும் பிரித்தால் நாம்யார்
நினைந்தால் புரியும் நிதானமாய்
இயக்கும் யாவையும் சூனியமாய்

எழுதியவர் : முரளி (4-Nov-14, 11:31 am)
Tanglish : onrumillai
பார்வை : 162

புதிய படைப்புகள்

மேலே