விடுமுறையில் விடை பெற்றவை

வாசம் தந்து விட்டு உதிர்கிறேன்
என்றது என் முற்றத்து
மல்லிகை....
என் பிள்ளைக்காய் எனை இழக்கிறேன்
என்றது என் தோட்டத்து
வாழை ....
உன் அழகுக்காய் நான் களைகிறேன்
என்றது என் கரத்து
நகங்கள்....
மின் வெட்டில் உனக்காய் உருகினேன்
என்றது வெளிச்சம் தந்து
மெழுகுவர்த்தி.