ஆனந்தம் நம் கையில்

ஆகாசம் மேலே
ஆதாயம் கீழே
ஆனந்தம் நம்வாழ்விலே !!

அழகான பூமி
அவள் தானே சாமி
அழகான வாழ்க்கை
அன்பாலே பூசித்திடு !!

மண்ணாக இருந்தாலும்
மணமாக நீ வாழனும்
மண்ணாசை போக்கி
மனிதத்தை நீ நேசி !!

கல்லாக இருந்தாலும்
கடவுளாக நீ இருந்து
கல்லாதோர் கண் திறந்து
கண்ணியமாய் நீ வாழ்க !!

புண்ணியம் தேடி நீ போகவேணாம்
புண்பட்டோர் மனம் தேற்றும் மருந்தானால் போதும்
புகழ் தேடி போகவேணாம்
பூரிப்பை யாவர்க்கும் பகிர்ந்து நீ மகிழ்ந்தாலே போதும்!

கடைகோடியில் பிறந்தாலும்
கடலினிலே மிதந்தாலும்
கடன் வந்து கதவடைத்தாலும்
கண்ணீர் சிந்தாமல் வாழும் மனம் கொண்டால் போதும் !

எதுவரை உன்வாழ்க்கை
அதுவரை மகிழ்ந்திரு
அரைவயிறு ஆனாலும்
அனைவர்க்கும் பகிர்ந்துண்ணு
அதுதாண்டா வாழ்க்கை
அது தாண்டாது நீ வாழ்க !

எழுதியவர் : கனகரத்தினம் (4-Nov-14, 1:05 pm)
பார்வை : 122

மேலே