என்னவள் போகிறாள்

கலைந்து போகும் மேகங்கள்
விண்ணில் கண்டேன்...
மறைந்து போகும் உறவுகள்
மண்ணில் கண்டேன்...

என்னோடு கைகோர்த்து
காலமெல்லாம் வருவாள்
என்று எண்ணிய முகம்...
இதோ என் எதிரே
கண்டும் காணாததுமாய்
கடந்து செல்ல...


இதோ பிரிந்து போகிறது
எந்தன் உயிர்
என் கண் முன்னே...

என் கைபிடித்து
தோல் சாய்ந்து...
ஒன்றாய் நடந்த காலங்களில்...
ஒற்றை நிமிடம் கூட..
என் கையை விட்டு விடாத அவள்...

இதோ கடந்து போகிறாள்
நான் யாரோ என்பது போல்...

அவள் அருகில் இருக்கும் போது...
பட பட வென துடித்த இதயம்...
இத்தனை வருடங்கள் கடந்தும்...
அதே படபடப்போடு !

அன்று அதை
நெஞ்சில் சாய்ந்து கேட்டு ரசித்த அவள்...
இன்று...
இதோ கடந்து போகிறாள்
நான் யாரோ என்பது போல்...

என் சட்டை காலர் பொத்தானும்...
தன்னை சுழற்றி விளையாடிய
விரல்கள்...
இன்று இருக்கமாய் போவதை
பார்த்தது ஏக்கத்துடன்...!

என்னவளின் அதே
சுவாசம் தரும் வாசம்...
என் நெஞ்சில் நிறைந்து ...
உறைந்து இருந்த நினைவுகளை
கண்களின் வழியே
காட்டி கொடுத்தது ...
கண்ணீர் துளிகளாய்!


என் கண்களில் தேங்கிய
கண்ணீர் துளிகளினூடே...
அவள் பிம்பம் ...
கொஞ்சம் கொஞ்சமாய் மறைய...

அந்த கண்ணீர் துளியும்
கீழே விழுந்து
தன்னை மரித்து கொண்டது...!

ஆம் ...!
என் என் என்னவள் தான்
என்னை கடந்து போகிறாள்...
நான் யாரோ என்பது போல்...!

இவன்,
நிலவின் நண்பன்!

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரிதர (5-Nov-14, 6:33 pm)
Tanglish : ennaval pokiral
பார்வை : 201

மேலே