IT என்னும் பம்மாத்து - வளர்ச்சிப் படிகள் - Stages - 3
கலர் கலரான கனவுகளுடன் உள்ளே நுழைகிறார்கள்.
முதல் சில வாரங்கள்
HR - இதுல நம்ம Company பத்துன எல்லா விஷயமும் இருக்கும். பாருங்க. வேற doubt னா கேளுங்க. We are ready to help you at any time.
Manager : Guys, See me a for a min. This is Mr/Mrs. Joined in our team. He/She did her degree bloaa bloaaa etc.,
மதிய உணவு இடைவேளையில்
Mr.x : Hi I am ...from (Native).
Mr. Y : Great ya. I am also from (native).( அவன் தான்டா உனக்கு ஆப்பு வைக்கப்போறான்.)
Mr.x : Work load எப்டி இருக்கும்.
Mr. Y : பெருசா ஒன்னும் இருக்காது. கொஞ்சம் development கொஞ்சம் testing. மெயில் அனுப்பிட்டு போய்டே இருக்கலாம்.
Mr.Y : Guys, Mr.x join பண்ணி one month ஆகிடுச்சி. Salary வந்துடுச்சி. So he is going to give treat. I hope he won’t mind if we order for Pizaa. Am I right Mr. X?
Mr.Y : என்ன credit கார்டு வச்சி இருக்கீங்க
Mr.x : எதுவும் இல்ல.
Mr.Y : எதுவும் இல்லயா?
Mr.x : இல்ல.
Mr.Y : It has its own plus and minus. என்னோட friend ஒருத்தன் credit card company work ல பண்ரான். அவன்ட சொல்லி ஏற்பாடு பண்றேன். உங்க salary எவ்வளவு?? (அடுத்தவன் சம்பளம் என்னங்கறத எவ்வளவு talent ஆ கேக்ரான்)
HR “ உங்க வர அக்டோபர்ல உங்க mid year performance review
Mr.x : நான் என்ன செய்யனும்.
HR “ This is just formality. We are checking whether you are sync with what you defined in review form.
Mr.Y : நெக்ஸ்ட் வீக் லீவு போட்ராத.
Mr.x : என்ன விஷேம்.
Mr.Y : Annual year end party. We will have drinks. Drinks சாப்டுவீங்கள்ல?( உன் தமிழ்ல தீய போட்டு கொளுத்த)
Mr.x : occasionally
Mr.Y : அது போதும்,Hey Guys இவன் நம்ம team da.
சம்பளம் தாண்டி முதல் வருடத்தில் வாங்கிய ஷூ, வாட்ச், சர்ட், பேண்ட், பேக் இத்தியாதிகள் போக கடன் Rs. 75000/-(3 credit cards with limit of 25000 each)