எவ்வினம் அந்த சீவனம்------அஹமது அலி
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணின் கருமணியில்
மின்னலடித்த கணம்
என்னின் உடலெங்கும்
பின்னலிட்டதே
அந்த பூவனம்.!
= *=*=
மண்ணின் வாசனை
மாறாத மயக்கம் தந்ததாய்
நாசியில் நுழைந்ததே
அந்த நறுமணம்.!
=*=*=
விண்ணின் வீதியில்
உலவியது போதுமென்று
என்முன்னே உலவ வந்ததோ
அந்த மதி வதனம்.!
=*=*=
பண்ணில் இசைபாடி
தென்றல் தேரேறி
என்னில் உறவாட வந்ததோ
அந்த மோகனம்.!
=*=*=
தன்னில் தனியே பிரிந்து
என்னையும் துணைக்கழைத்து
பின் தொடர காரணமும்
அந்த சீவனம்.!
=*=*=
இக்கணமும் எக்கணமும்
சிக்கனமில்லா சிந்தையை தோண்டி
சீற்றத்தை தூண்டுவதும்
அந்த பெண்ணினம்.!