எப்போதும் என்னோடு

நீ என்னோடு
வரும்போதுதான் ..
செடிகள் பூக்கின்றன..
நிலவு வெளியில் வருகிறது..
தென்றல் வீசுகிறது..
வானவில் தோன்றுகிறது..
அதுவரையில்
அவைகள் எல்லாம்..
உன் வரவை எதிர்நோக்கி
காத்திருக்கின்றன..
என்னைப் போலவே !

உன் கொலுசின் ஒலி
கேட்ட பின்புதான்..
வண்டுகள் ரீங்காரம் இசைக்கின்றன..
ஆலய மணிகள் ஒலிக்கின்றன..

இன்னும் எவ்வளவோ..
அதனால்..
எப்போதும் என்னுடனே நீ இருந்து விடு..
இயற்கை தன் வேலைகளை
நிறுத்தாமல் செய்வதற்கு!

எழுதியவர் : கருணா (8-Nov-14, 9:58 am)
Tanglish : eppothum ennodu
பார்வை : 327

மேலே