நிஜமான நிழல்

உன்னிடமுள்ள
எனக்கான கோடிட்டயிடங்களை
நிரப்ப
என்னையன்றி
வேறெவராலும் முடியாதென்பதை
நீ ....... ?

நமதிருவருக்குமான
கடைசி வார்த்தை
உயிரோடொட்டிக் கொண்டு
உதிர மறுக்குமொரு
குருதித் துளியைப் போல்
இறுதிவரை யாராலும்
அழிக்கமுடியா
தடயமாய் .......... ?

இடைவெளிகள் நம்மையும்
நாம்
இடைவெளிகளையும்
அங்கீகரித் துக்கொண்ட
அகம்பாவத்திற்குள்
அடைபட்டு -
வெளிவர மறுக்கிற
இருவருக்குமான திமிருக்குள்
ஒளிந்து கிடக்கிறது
அந்த .......?

உன் வரவேற்ப்பறையில்
தொங்கிக் கொண்டிருக்கும்
நிலைக் கண்ணாடியில்
தினமும் கொத்தவரும்
சிட்டுக் குருவியினை
எதிர்பார்த்து
வரவேற்ப்ப றையின்
கதவினை தாளிட்டு
கண்ணாடியை .....?

தினமும்
நாமிருவருமே
விரும்பாத
நமதிருவரின் வருகையும்
நிகழ்ந்தே விடுகிறது
நமது அனுமதியின்றி
பின் தொடரும்
நமது நிழலைப் ......?

எழுதியவர் : பாலா (8-Nov-14, 12:30 pm)
பார்வை : 172

மேலே