என்னமோ ஏதோ - சந்தோஷ்
நீ போகும்
பாதைகளெல்லாம்
எறும்புக்கள்அணிவகுத்து
பின் தொடர்வது ஏனோ ?
ஓ ...!
நேற்றுதானே உன்னை
தமிழ்த்தேனில்
கவிதை செய்தேன் தானே?
பின் தொடரட்டும்
எறும்புகள் - அதுனாலே
உன்னை
பின் தொடரமாலிருப்பார்கள்
வம்பர்கள்..!
---------------------------------------
பரிசோதித்த மருத்துவர்
சொல்கிறார்
என்னுடலில் சர்க்கரை குறைவாம்..!
நீ அங்கிருக்கும்போது
எப்படி இனித்திடும்
என் தேகம்.?
ஆமாதானே -என்
காதலி தேனே ...!
---------------------------------------
நானொரு தீவரவாதி
என்கிறேன்
நம்பவே மாட்டிகிறார்கள் .
இந்த மக்கள்..
என் செல்லமே...!
நீ பதில் சொல்
நான் தீவிரவாதிதானே....?
உன்னை காதலிப்பதில்......!
---------------------------------------
இருவரியில் ஒரு
காதல் கவிதை
கேட்டாய் அல்லவா..!
இதோ எழுதிக்கொள்..!
== நான் மழை - அதில்
== நீ நனை
---------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்